உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  ஆஸ்திரேலியாவில் புர்கா அணிய தடை கோரி எம்.பி., நுாதன போராட்டம்

 ஆஸ்திரேலியாவில் புர்கா அணிய தடை கோரி எம்.பி., நுாதன போராட்டம்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பொது இடங்களில் புர்கா அணிந்து செல்வதற்கு தடை கோரி, எம்.பி., ஒருவர் நுாதனமாக நடத்திய போராட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவின், 'ஒன் நேஷன்' கட்சியின் தலைவரான பாலின் ஹேன்சன், பொது இடங்களில் முஸ்லிம்கள் புர்கா அணிவதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். சென ட் சபையில் அதற்கான மசோதாவையும் அவர் அறிமுகப்படுத்த முயன்றார். மற்ற கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது முயற்சி பலிக்கவில்லை. இ த னால், கடும் அதிருப்தி அடைந்த அவர், மீண்டும் செனட் சபை கூடியபோது புர்கா அணிந்தபடி வந்தார். அவரது இந்த நுாதன போராட்டத்திற்கு சக எம்.பி.,க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். எனி னும், ஹேன்சன் தான் அணிந்திருந்த புர்காவை கழற்ற மறுத்ததால், செனட் சபை ஒத்தி வைக்கப்பட்டது. 'ஹேன்சன் ஒரு இனவெறியர்' என, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினரும், முஸ்லிம் எம்.பி.,யுமான மெஹ்ரீன் பாருக்கி கூறினார். இதேபோன்று, மேற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்.பி., பாத்திமா பேமன், இச்செயல் அவமானகரமானது என்று தெரிவித்தார். இதையடுத்து செனட் சபையி ல் இருந்து, ஹேன்சனை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை எம்.பி.,க்கள் முன்மொழிந்தனர். அப் போதும் ஹேன்சன் வெளி யேற மறுத்ததால், சபை ஒத்தி வைக்கப்பட்டது. குயின்ஸ்லாந்து மாகாணத்தின் செனட் உறுப் பினரான ஹேன்சன், முஸ்லிம் ஆடைகளுக்கு எதிராக நீண்டகாலமாக போராடி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி