உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மிரட்டும் குரங்கு அம்மை... உலக நாடுகளே உஷார்; அவசர நிலை அறிவித்தது உலக சுகாதார அமைப்பு

மிரட்டும் குரங்கு அம்மை... உலக நாடுகளே உஷார்; அவசர நிலை அறிவித்தது உலக சுகாதார அமைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: உலக நாடுகளிடையே குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு பிறப்பித்துள்ளது.

குரங்கு அம்மை

குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய். இந்த நோயை எம்பாக்ஸ் என்று அழைக்கின்றனர். இது மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில், 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பரவல்

கொரோனாவைப் போல 2022 முதல் பரவத் தொடங்கிய இந்த நோயானது முதலில் ஆப்ரிக்க நாடுகளில் பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது, மெல்ல மெல்ல 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவத் தொடங்கியது. ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் 517 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்தாண்டு 160% இந்த நோய் தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் பாதிப்பு

கடந்த 2022ல் இந்த நோய் பரவத் தொடங்கிய போது, கேரளாவில் மூவருக்கு குரங்கு அம்மை சமீபத்தில் உறுதியானது. இதற்கிடையே, மேற்கு டில்லியைச் சேர்ந்த 34 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டது.

அறிகுறிகள்

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோருக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அதன் பின் உடலில் தடிப்புகள் ஏற்படும். இது, முகத்தில் இருந்து உள்ளங்கால் வரை பரவும். தலைவலி, தசை வலி, உடல் சோர்வு உண்டாகும். தொண்டை வலி மற்றும் இருமல் இருக்கும்.குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும், என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

'இமான்வேக்ஸ்' தடுப்பூசி

ஐரோப்பிய நாடான டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரிக்கும், 'இமான்வேக்ஸ்' தடுப்பூசி பெரியம்மை நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதே தடுப்பூசியை குரங்கு அம்மை நோய்க்கும் பயன்படுத்த ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்திருந்தது.

பொது சுகாதார அவசர நிலை

குரங்கு அம்மை தொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது:- குரங்கு அம்மை தொற்று தொடர்பாக அவசரநிலை கமிட்டி என்னை சந்தித்து, தற்போதைய சூழலில் உலக சுகாதார நிலை குறித்த சில அறிவுரைகளை வழங்கினர். அதனை நான் முழுமையாக ஏற்றுக் கொண்டேன். உலக அளவில் பொது சுகாதாரத்தின் நிலை அபாயகரமாக உள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் தன்னாட்சி சுகாதார நிறுவனம் நேற்று அவசர நிலையை அறிவித்துள்ளது. இந்த நோய் தொற்றில் மக்களை பாதுகாக்க உலக சுகாதார நிறுவனம், பாதிக்கப்பட்ட நாடுகளுடன் இணைந்து செயல்பட இருக்கிறது, எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தமிழ்வேள்
ஆக 15, 2024 19:55

நாய் பூனை அது இது என்று எல்லா பிராணிகளோடும் வரைமுறை இன்றி இழைந்து கொஞ்சி ஒரே தட்டில் உண்டு ஒரே படுக்கையில் தூங்கி..... அப்புறம் டிசைன் டிசைனா வியாதி வராமல் என்ன செய்யும்? விலங்குகளை, விலங்குகளாக நடத்த வேண்டுமே தவிர இரத்த சொந்தங்கள் போல அல்ல.....


J.Isaac
ஆக 15, 2024 14:58

இந்த ஆளு வாயை திறந்தா நல்லதே பேசுகிறது இல்லை. குரங்கு புத்தி


Ramesh Sargam
ஆக 15, 2024 11:49

மீண்டும் மருந்து தயாரிக்கும் கம்பெனிகளுக்கு அடிக்குது ஜாக்பாட் ...


J.Isaac
ஆக 15, 2024 14:57

கொரானாவில் சீரம் கம்பெனிக்கு ஜாக்பாட். இதில் அதானிக்கா அல்லது அம்பானிக்கா?


R S BALA
ஆக 15, 2024 11:00

மொத மருந்து கண்டுபிடிக்கிறது அப்பறமா வியாதியை பரப்புவது டீல் சூப்பர்ரா..


sridhar
ஆக 15, 2024 10:49

உலகின் எல்லா தொற்று நோய்க்கும் கேரளாவில் இடமுண்டு .


chandu
ஆக 15, 2024 14:17

இது எப்படி திமிங்கலம் ? அதான எப்படி ?


sundarsvpr
ஆக 15, 2024 09:51

வரும்முன் காப்போம் என்பது இல்லை. வந்தபின் தற்காலிக நிவாரணம் தேடுகிறோம். இது ரெமடி அல்ல. சுத்தம் சுகம் தரும் என்ற வாசகம் மக்கள் மனதில் படியும் வரை ஆசிரியர் தினமும் வகுப்பு தொடங்குமுன் சொல்லவேண்டும். அப்போதுதான் மாணவர்கள் மனதில் பதியும். தேவையற்ற இடங்களுக்கு சாராயக்கடை இதில் ஓன்று அருகில் கூட செல்லமாட்டார்கள்.


நிக்கோல்தாம்சன்
ஆக 15, 2024 09:35

இங்க இருக்கும் ஆட்சியாளர்களை விடவா இந்த நோய்களால் மக்கள் சாவ போறாங்க , சாலை மோசமா இருக்கு என்று சொன்னதற்காக கொலை செய்ய முயற்சித்த கட்சியை விடவா இந்த அம்மை நோய் கொல்லப்போகுது ?


veeramani
ஆக 15, 2024 09:32

என்னங்கடா .. திரும்ப ஆரம்பம் .. குரங்கு அம்மை. இது ஆரிஜின் சீனாவா அல்லது ஆப்ரிக்காவா .. இந்திய பெற்றோர்களே.. பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் பொறுப்பு எடுக்கவேண்டும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை