உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மியான்மர் ராணுவத்தின் விமான தாக்குதல்: 40 பேர் பலியான சோகம்

மியான்மர் ராணுவத்தின் விமான தாக்குதல்: 40 பேர் பலியான சோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நைபைடவ்: மியான்மர் ராணுவம் விமானப்படை மூலம் நடத்திய தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அங்கு, ராணுவத்திற்கும், ஆயுதம் ஏந்திய இன சிறுபான்மையினர், புரட்சி குழுக்கள் இடையே அடிக்கடி மோதல் நீடித்து வருகிறது. இதில், பல பகுதிகளை ஆயுதக்குழுவினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதனால், அந்நாட்டு மக்கள் அகதிகளாக வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர்.இந்நிலையில், ராம்ரீ தீவில் அந்நாட்டு நேரப்படி மதியம் 1:30 மணியளவில், மியான்மர் ராணுவம் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் அங்கிருந்த 500க்கும் மேற்பட்ட வீடுகள் தீப்பற்றி எரிந்தன. மேலும் இந்த தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.20க்கும் மேற்பட்டோர்கள் காயமடைந்துள்ளனர்.இங்கு இணைய சேவை உள்ளிட்ட தொலைத்தொடர்பு வசதிகள் ஏதும் இல்லை. இதனால், அக்கிராமத்தின் உண்மையான நிலவரம் பற்றி தகவல் வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
ஜன 10, 2025 07:12

மக்களை காக்கவேண்டிய இராணுவம் விமானத்துக்கு பெட்ரோல் போடக்கூட காசில்லாதபொழுதும் வெறி பிடித்து பொதுமக்களை கொன்று குவிக்கிறது. சீனா சொல்வதை செய்வார்கள். கிளர்ச்சியாளர்கள் வெற்றி பெறுவது நல்லது - இல்லை என்றால் மொத்த நாட்டையும் சுடுகாடாக ஆக்கிவிடுவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை