உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆங்சான்சூயி அரசியல் சுற்றுப்பயணம்

ஆங்சான்சூயி அரசியல் சுற்றுப்பயணம்

பாகோ: மியான்மர் நாட்டின் எதிர்கட்சி தலைவரான ஆங்சான்சூயி அரசியல் சார்ந்த ஆதரவாளர்களை சந்திக்கும் விதமாக தனது முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். பாகோ மற்றும்யாகோன் ஆகிய இரண்டு நகரங்களுக்கு ஒரு நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அவரது சுற்றுப்பயண பாதையில் ஏராளமான ஆதரவாளர்கள் சாலையின் இரு புறங்களிலும் குவிந்திருந்தனர். ஆங்சான்சூயி காரை பின்தொடர்ந்து சென்ற 20க்கும் மேற்பட்ட கார்களில் ஆதரவாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உடன் சென்றனர். ஆன்சான்சூயியை கண்ட மாவ் துசா என்ற 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கூறுகையில் ஆங்சான்சூயியை நேரிடையாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் நான் இனி சந்தோசமாக இறப்பை எதிர்கொள்வேன் என்று மகிழ்ச்சியோடு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்