உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பெங்காலியில் பெயர் பலகை; எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு

பெங்காலியில் பெயர் பலகை; எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு

லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில், 'ஒயிட்சேப்பல்' ரயில் நிலையம் உள்ளது. கிழக்கு லண்டனுக்கு வங்கதேச சமூகத்தின் பங்களிப்பை போற்றும் வகையில், இந்த ரயில் நிலையத்தில், 'பெங்காலி' மொழி பெயர் பலகை 2022ல் வைக்கப்பட்டது.இந்நிலையில், கிரேட் யார்மவுத் எம்.பி., ரூபர்ட் லோவ், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'இது லண்டன்; ஒயிட்சேப்பல் ரயில் நிலையத்தின் பெயர், ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்' என, பதிவிட்டார்.அத்துடன், பெங்காலியில் ரயில் நிலையத்தின் பெயர் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார். இதற்கு கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில், ரூபர்ட் லோவ் கருத்தை ஆமோதிக்கும் வகையில், உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க், 'ஆம்' என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Tetra
பிப் 14, 2025 18:35

இப்பெயருக்கு காரணம் அங்கிருக்கும் வங்கதேச முகமதியர்கள் அதிகம் இருப்பதுதான். எல்லாம் ஓட்டு செய்யும் மாயம்


Neelachandran
பிப் 13, 2025 11:14

இங்கிலாந்துக்காரர்கள் ஆட்சேபனை எழுப்பட்டும்.எலன் மாஸ்க் சர்வாதிகாரியா?


Ragukumar G
பிப் 13, 2025 07:11

எல்லான் மஸ்க் வேண்டுமானால் உலகின் மிக பெரிய பணக்காரராக இருந்து விட்டு போகட்டும். அதற்காக அவர் எல்லாவற்றிற்கும் ஒரு கருத்தை தெரிவித்து அதை எல்லோருக்கும் முந்திரிக் கொட்டை போன்று தெரியப்படுத்த வேண்டும் என்று என்ன அவசியம் இருக்கிறது. அதுவும் எல்லா நாட்டு விஷயங்களிலிலும் தானாக முன்வந்து வலுக்கட்டாயமாக வந்து தன் கருத்தை வெளிப்படுத்துவது என்பது அவர் சார்ந்த நாடான அமெரிக்க நாட்டின் உலக நாட்டாமை எண்ணத்தையும் தான் தான் உலக போலீஸ் என்ற எண்ணத்தையும் பிரதிபலிக்கிறது.


Kumar
பிப் 13, 2025 07:11

பெங்காலி, இந்தியா மொழி மட்டும் இல்லை, அது பங்களாதேஷ மொழியாக முக்கியமாக பார்க்க படுகிறது


MI B
பிப் 13, 2025 06:34

Cant Musk Accept an Indian language as Gratitude,is his tolerance so small?


Am from here
பிப் 11, 2025 15:00

Aam nu sonnathu kadum ethirpa ?


G K
பிப் 11, 2025 10:46

we only need English as primary.. they are not even ready to recognise any word from Indian languages


முக்கிய வீடியோ