உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  இந்தியாவுக்கு கடத்த முயன்ற போதை பொருள் பறிமுதல்

 இந்தியாவுக்கு கடத்த முயன்ற போதை பொருள் பறிமுதல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து நம் நாட்டிற்கு கடத்த முயன்ற, 14 கோடி ரூபாய் மதிப்பிலான, 22 கிலோ 'கோகைன்' போதைப்பொருளை அந்நாட்டு எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தின் அருகே உள்ள ஒரு முக்கிய சரக்கு கிடங்கில் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, சாண்டோ டொமிங்கோ நகரில் இருந்து நம் நாட்டு தலைநகர் டில்லிக்கு அனுப்பப்படவிருந்த சந்தேகத்திற்கிடமான பார்சலை அதிகாரி கள் சோதனையிட்டனர். அதில், இசைக் கருவிகள் இருப்பதாக குறிப்பிடப்ப ட்டிருந்தது. பார்சலில் இருந்த நான்கு ஸ்பீக்கர்களை உடைத்து பார்த்த அதிகாரிகள், அதில், 'கோகைன் ஹைட்ரோகுளோரைடு' என்ற வீரியமிக்க போதைப்பொருள் இருப்பதை கண்டறிந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மொத்த எடை, 22.35 கிலோ. அதன் சர்வதேச மதிப்பு, 14 கோடி ரூபாய். இது குறித்து வழக்குப் பதிந்த போலீசார், டில்லிக்கு இந்த பார்சலை அனுப்பியது யார், இந்தியாவில் இதை வாங்கவிருந்தது யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை