உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போராட்டக்காரர்களால் தெருவில் துரத்தி, தாக்கப்பட்ட நேபாள நிதியமைச்சர்

போராட்டக்காரர்களால் தெருவில் துரத்தி, தாக்கப்பட்ட நேபாள நிதியமைச்சர்

காத்மாண்டு: நேபாளத்தில் நடைபெறும் போராட்டத்தின் மத்தியில் அந்நாட்டு நிதியமைச்சர் போராட்டக்காரர்களால் தெருவில் தாக்கப்பட்டார்.நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக ஊடகங்களுக்கு தடையால் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது. இந்த போராட்டங்களில் நேற்று 19 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொடரும் போராட்டங்களால் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அரசு கட்டிடங்களுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, இன்று பதவியை ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து வெளியான வீடியோவில்,நிதியமைச்சர் பிஷ்ணு பிரசாத் பவுடேல் சாலையில் துரத்தப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டார்.நேபாள காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தியூபா மற்றும் வெளியுறவு அமைச்சர் அர்ஜு ராணா ஆகியோரும் காயமடைந்தனர்.ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பாதுகாப்பை வழங்க நேபாள ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

நிக்கோல்தாம்சன்
செப் 09, 2025 21:07

இன்னமும் பாகிஸ்தான் , இலங்கை இரண்டு மட்டும்தான் இருக்கு , எப்போ? இது போன்று அமெரிக்காவில் நடக்குமா நடக்காதா ?


Rathna
செப் 09, 2025 21:05

எப்போது ஹிந்து நாடு என்பதில் இருந்து விலகி போனார்களோ அன்றில் இருந்தே நேபாளத்திற்கு பிரச்சனை ஆரம்பித்து விட்டது. எங்கெல்லாம் ஹிந்து மதம் அழிக்கப்படுகிறோதோ, அல்லது தர்மம் அழிகிறதோ அங்கெல்லாம் வன்முறை தலையெடுத்து ஆடுகிறது. ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, பங்களாதேஷ், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா, ஈரான், ஈராக் இந்தோனேஷியா இன்னும் பல உதாரணங்கள்.


KRISHNAN R
செப் 09, 2025 19:40

அந்நிய கூலிகள் இங்கும் உண்டு


Sun
செப் 09, 2025 19:23

இப்போது கவிழ்ந்த நேபாள அரசு ஒரு சீன ஆதரவு அரசுதான். கலவரத்திற்கு சீனாவின் கைவரிசை சாத்தியமில்லை. கொஞ்ச நாளாகவே நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கோரி போராட்டம் நடை பெற்று வருகிறது. அதை நேபாள அரசு ஈசியாக அடக்கி விட்டது. இப்போது பங்களாதேஷில் நடந்தது போல் மாணவர்கள், இளைஞர்கள் தூண்டப் பட்டு ஆளும் நேபாள அரசு பலத்த அடி வாங்கியுள்ளது. இரண்டு நாட்டு கலவரங்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டு கலவரமுமே அந்தந்த நாடுகளின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த ஆளும் அரசாங்கங்கள் முயன்றதன் விளைவே இந்த கலவரங்கள்.இப்போது தெரிகிறதா? போராட்டத்தின் திசை மாற்றத்தை புரிந்து கொண்ட மோடி அன்று ஏன் அன்று வேளாண்மை சீர்திருத்த சட்டத்தை நிறுத்தி வைத்தார் என்று?


V Venkatachalam
செப் 09, 2025 21:57

மிஸ்டர் சன். சூப்பர் எக்ஸ்ப்ளனேஷன். கன்கிராஜுலேஷன்ஸ்.


Sun
செப் 09, 2025 19:06

லகுட பாண்டி களா! மறுபடியும் வெள்ளைக் கொடிக்கு வேலையா ? எங்கே அந்த நோபல் பரிசு கமிட்டி? யாரங்கே போடு வரியை நேபாளத்துக்கு 1000 சதவீதம் !


MARUTHU PANDIAR
செப் 09, 2025 18:26

அமெரிக்காவே இப்போது உலகின் நம்பர் ஒன் எதிரியாக உருவெடுக்கிறான் . இந்தியாவை அழிக்கும் வேலைக்கு டாப் முன்னுரிமை கொடுக்கிறான். இங்கே உள்ளூரில் பப்பு, சிவப்பு வட்ட தொப்பி, சிம்பிள் புடவை- இவை வடக்கிலும், வெள்ளை வேட்டிகள் தெற்கிலும் அவருக்கு என்றென்றைக்கும் பக்க பலம் என்கிறார்கள். ரொம்ப சுலபமாக நிறைவேற்றுவாராம் -சொல்கிறார்கள்.


Venkateswaran Rajaram
செப் 09, 2025 18:22

இந்த மக்கள் புரட்சி நம் திருட்டு திராவிட நாட்டில் ஏற்படவேண்டும் ....


MARUTHU PANDIAR
செப் 09, 2025 18:17

கூடிய விரைவில் இலங்கை மற்றும் இந்தியாவை சுற்றியுள்ள எதாவது குட்டி நாடுகளிலும் இது போன்றதொரு ரத்தக் களரியை நிச்சயம் பார்க்கப் போகிறோம். பயங்கரவாதிகளுக்கு எல்லா பக்க த்திலிருந்தும் ஊடுருவ வழியமைத்து கொடுத்து இந்தியாவை நிலை குலைய வைப்பது தான் சி ஐ ஏ வின் திட்டம்.


Tamilan
செப் 09, 2025 18:14

மோடி அரசு கற்றுக்கொள்ள நிறைய உள்ளது


MARUTHU PANDIAR
செப் 09, 2025 18:07

இந்திய துணைக்கண்டத்தில் மீண்டும் ஒரு சி ஐ ஏ கைவரிசை. வங்க தேசம் மற்றும் பாகிஸ்தானில் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போல ஒரு டம்மி கைப்பாவை அரசை அரியணை ஏற்றுவதற்காக செய்யப்படும் ரத்தக் களறி. இந்தியாவை சுற்றி நின்று ஓயாத பிரச்னை பண்ணுவதற்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை