UPDATED : செப் 27, 2024 10:14 PM | ADDED : செப் 27, 2024 09:51 PM
பெய்ரூட், : ஐ.நா.வில் இஸ்ரேல் பிரதமர் தன் உரையை முடித்த நிலையில் லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மீது தாக்குததல் துவக்கியது இஸ்ரேல் ராணுவம். ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போர் ஒரு பக்கம் நடக்கும் நிலையில், அதற்கு ஆதரவான லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதலை, மேற்காசிய நாடான இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.கடந்த சில நாட்களில் ஐடிஎப் எனப்படும இஸ்ரேல் ராணுவப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 700 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். பயங்கரவாதிகளின் இடங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.முன்னதாக ஐ.நா. பொதுச்சபையில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன் யாகு, ஹிஸ்புல்லாவை ஒழித்துக்கட்டும் வரை தாக்குதலை நிறுத்த முடியாது என திட்டவட்டமாக கூறினார்.இதையடுத்து இன்று ( செப்/.27) லெபானின் தெற்கு எல்லையில் இஸ்ரேல் ராணுவம் நூற்றுக்கும் மேற்பட்ட டாங்கிகளை குவித்தது.ஐ.நா.வில் பிரதமர் நெத்தன் யாகு உரை முடிந்த நிலையில், லெபானின் தெற்கு எல்லை பகுதியான தாஹியேக் பகுதியை இஸ்ரேல் ராணுவம் தாக்க துவங்கியது. இதில் பதுங்கு குழிகள் மீது குண்டு வீசப்பட்டதில் 4 கட்டடங்கள் தரைமட்டாகின..தொடர்ந்து ஹிஸ்புல்லா முக்கிய தலைவர் ஹூசைன் நஸ்ரல்லாஹா இருப்பிடமான தலைமை அலுவலகம் மீது இஸ்ரேல் ராணுவம் குறி வைத்து தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளன.இஸ்ரேல் பிரதமருக்கு பலத்த பாதுகாப்பு
இதனிடையே ஏமன் படைகள், செங்கடல் பகுதியில் அமெரி்க்க கப்பல்கள் மீது தாக்குதலை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இஸ்ரேல் அதிபர் நெத்தன்யாகுவுக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.