உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / புது நம்பிக்கை பிறந்தது: செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்காம்: ஆதாரத்தை காட்டுது நாசா

புது நம்பிக்கை பிறந்தது: செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்காம்: ஆதாரத்தை காட்டுது நாசா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பிற்கு அடியில் திரவ வடிவில் தண்ணீர் உள்ளது என நாசாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.பூமிக்கு அப்பால் வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்வது குறித்து விஞ்ஞானிகள் நீண்ட காலம் ஆய்வு நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் நாசா, செவ்வாய் கிரகத்திற்கு இன்சைட்ஸ் லாண்டர் என்ற விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்து வருகிறது. இதன் பணிக்காலம் 2022 டிச., மாதத்துடன் நிறைவு பெற்றது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i69dxc65&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இருப்பினும் அந்த விண்கலமானது , அங்கு சீஸ்மிக் அலைகளை ஆய்வு செய்து வருகிறது. செவ்வாய் கிரகத்தில் 1,319 பூகம்பம் ஏற்பட்டதை பதிவு செய்துள்ளது. சீஸ்மிக் அலைகளின் வேகத்தை வைத்து, பூமிக்கு அடியில் பல வளங்கள் இருக்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர். முன்பு நடந்த ஆய்வில் அந்த கிரகத்தில் உறைந்த நிலையிலும், அதன் வளிமண்டலத்தில் நீராவி இருந்தது தெரியவந்துள்ளது.இந்நிலையில், புதிய ஆய்வில் செவ்வாய் கிரகத்தின் அடிப்பகுதியில் திரவ வடிவில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.முந்தைய காலங்களில் செவ்வாய் கிரகத்தில் ஆறுகள் மற்றும் ஏரிகள் இருந்தன என்பதை நிரூபிக்கும் நீர் தடங்கள் இருந்துள்ளது. ஆனால், அங்கிருந்த வளிமண்டலம் பறிபோனதால், அங்கு இருந்த தண்ணீர் அனைத்தும் ஆவியாகி 300 கோடி ஆண்டுகளாக செவ்வாய் கிரகம் பாலைவனமாக உள்ளது.இது தொடர்பாக கலிபோர்னியா பல்கலை பேராசிரியர் மைக்கேல் மங்கா கூறுகையில், ‛‛ ஒரு கிரகத்தின் பரிமாணத்தை வடிவமைப்பதில் நீர் முக்கியமான மூலக்கூறு. செவ்வாய் கிரகத்தில் இருந்த நீர் எங்கே போனது என்பதற்கு தற்போதைய ஆய்வு பதிலளிக்கிறது. பூமியில் நிலத்தடியில் நீர் இருக்கும்போது, செவ்வாய் கிரகத்திலும் அப்படி இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.உயிரினங்கள் வாழ்வதற்கு நீர் இன்றியமையாததாக உள்ளதால், தற்போதைய கண்டுபிடிப்பானது. புதிய நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் புதிய கண்டுபிடிப்பு மூலம், அதன் காலநிலை , வெளிப்புர மேற்பரப்பு மற்றும் அதன் உட்புறத்தின் பரிணாம வளர்ச்சியை புரிந்து கொள்ள முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramesh Sargam
ஆக 14, 2024 20:56

கர்நாடகாகாரனையும், தமிழ்நாட்டுக்காரனையும் அங்கே அனுப்பலாமா? எதுக்கு? அங்குள்ள தண்ணீரை பங்குபோட்டுக்கொள்ள..


என்றும் இந்தியன்
ஆக 13, 2024 17:50

அப்போ அங்கேயிருந்து தண்ணீர் கொண்டு வரலாம் என்று ஸ்டாலின் சொன்னாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை


Yaro
ஆக 13, 2024 16:52

Apo A1


Pandi Muni
ஆக 13, 2024 14:56

இந்நேரம் GSQUARE காரனுங்க பிளாட் போட கெலம்பி இருப்பானுங்களே


Sivasankaran Kannan
ஆக 13, 2024 15:41

Dravidian models already established social justice in Mars, as well as Saturn.


Barakat Ali
ஆக 13, 2024 14:29

செவ்வாய் பச்சைப்பசேல் ன்னு இருந்தாலும் பூமிக்கு அழிவு ன்னு வந்துட்டா அம்பானி, எலான் மஸ்க், அரசியல்வாதிங்க இந்த மாதிரி ஆளுங்கதான் போகமுடியும் .....


சமூக நல விரும்பி
ஆக 13, 2024 14:21

நம் அரசியல் வாதிகள் இப்போதே செவ்வாய் கிரகத்தில் வீடு கட்ட தொடங்கி விடுவார்கள். அலாட்மென்ட்கு ரெடி


Swaminathan L
ஆக 13, 2024 14:21

விஞ்ஞானமும் அமெரிக்காவும் பூமியை செவ்வாய் போல ஆக்காமல் இருந்தால் சரி.


தமிழன்
ஆக 13, 2024 14:14

பல போதை வழக்குகளில் கைது ஆன முன்னாள் திமுகவின் அயலக அணி பொறுப்பாளர் ஜாபர் சாதிக் மட்டும் இப்போ கைது ஆகாமல் இருந்து இருந்தால், ...........................


தமிழன்
ஆக 13, 2024 14:11

செவ்வாய் கிரகத்தில் ஒரு மேம்பாலம் கட்டி, அங்கே ரெட் ஜியன்ட் தயாரிப்பில் படம் எடுத்து தமிழக மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் அமுக்கி விட வேண்டியது ஹான்.


தமிழன்
ஆக 13, 2024 14:10

அட.. அப்படியா.. அதுவும் திமுக ஆட்சியிலா.. சரி ஒரு கூட்டம் போட்டு.. குழு அமைத்து தஞ்சாவூரில் உள்ள விவசாய நிலங்களை அழித்தது தமிழ் நாட்டில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு நேரடி விமான சேவை.. அங்கே விமானம் கட்ட மக்கள் பணம் 5 லட்சம் கோடி.. என்ன சோறு சாப்பிடும் மக்களே அடுத்த தேர்தலில் யாருக்கு ஒட்டு போடணும் என்று முடிவு பண்ணிட்டீங்களா


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி