உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுக்கு சலுகை வழங்க நியூசிலாந்தில் எதிர்ப்பு

இந்தியாவுக்கு சலுகை வழங்க நியூசிலாந்தில் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா - -நியூசிலாந்து நாடுகளுக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுவதாகக்கூறி நியூசிலாந்தில் அரசியல் எதிர்க்குரல்கள் எழுந்துள்ளன.இந்த ஒப்பந்தத்தால் இறக்குமதி வரிக்குறைப்பு, தொழிலாளர் விதிகளில் சீர்திருத்தங்கள், பணி விசா விரிவாக்கம், இந்திய மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்க உள்ளன.இவற்றை நியூசிலாந்தின் ஆளும் கட்சியான தேசிய கட்சியின் கூட்டணியில் உள்ள 'நியூசிலாந்து பர்ஸ்ட்' கடுமையாக எதிர்த்துள்ளது. அந்நாட்டு பார்லி.,யில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து வாக்களிக்கப்போவதாகக் கூறியிருக்கிறது.அக்கட்சித் தலைவரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், ' குடியேற்ற விதிகளால் நியூசிலாந்து மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.பால் பொருள் வர்த்தகத்துக்கு சாதகமான அம்சங்கள் இல்லை. அதேபோல இந்தியர்களுக்கு குடியேற்ற உரிமை தாராளமாக உள்ளது. ஆனால் நியூசிலாந்தின் வேலைச்சந்தை குறுகிவிட்டது.இந்திய மாணவர்களுக்கு சலுகைகள் அளிப்பதால் நியூசிலாந்து மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு நெருக்கடி ஏற்படும்' என்று கூறியுள்ளார்.

யாருக்கு - என்ன சலுகை?

இந்தியாவைச் சேர்ந்த அறிவியல், தொழில்நுட்பம், பொறி யியல், கணித பட்டதாரிகளுக்கு- படிப்பு முடிந்தபிறகு 3 ஆண்டுகளுக்கு பணி விசாமுனைவர் ஆய்வாளர்களுக்கு - 4 ஆண்டுகள்வரை பணிபுரிய விசா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
டிச 24, 2025 04:07

பொருளாதாரம் படுத்தால் தவிர அங்கும் ஒன்றும் நடக்காது. சலித்துப்போன வேலையை விட்டு விட்டு ஆஸ்திரேலியாவுக்கு குடியேறி வருவோரும் கூட உண்டு. ஒரு மாதிரியான ஊர். சுற்றிப்பார்க்கலாம்.


SANKAR
டிச 24, 2025 21:54

sometime ago some commentef on this mutually beneficial agreement and even questioned my educational qualification. Now ruling coalition party itself says it is harmful and they will vote against thisANY COMMENT NO!? Plain truth is they are not longer willing to allow india to exploit them by continuing 5 billion dollar surplus.Same as position taken by US


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை