உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நைஜீரியாவில் பயங்கரம்; கண்ணிவெடியில் சிக்கிய டேங்கர் லாரி வெடித்ததில் 26 பேர் பலி!

நைஜீரியாவில் பயங்கரம்; கண்ணிவெடியில் சிக்கிய டேங்கர் லாரி வெடித்ததில் 26 பேர் பலி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அபுஜா: நைஜீரியாவில் கண்ணிவெடியில் சிக்கிய டேங்கர் லாரி வெடித்ததில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் அரசுக்கும், பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. எதிரிப்படைகளை பழி வாங்குவதற்காக, வெவ்வேறு இடங்களில் கண்ணி வெடிகள் பதிக்கப்பட்டுள்ளன.அவ்வாறு பதிக்கப்பட்டு இருந்த கண்ணி வெடியில் சிக்கிய டேங்கர் லாரி நேற்று வெடித்து சிதறியது. இந்த விபத்தில், அக்கம்பக்கத்தில் இருந்த ஆண்கள் 16 பேர், பெண்கள் 4 பேர் மற்றும் குழந்தைகள் 6 பேர் என மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நைஜீரியாவில் இது போன்ற விபத்து சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளில் இத்தகைய வெடி விபத்துகளில் 40 ஆயிரம் பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !