உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்பின் கருத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்; நிக்கி ஹாலே

டிரம்பின் கருத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்; நிக்கி ஹாலே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ரஷ்ய எண்ணெய் தொடர்பான டிரம்பின் கருத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்தார்.இது குறித்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தெற்கு கரோலினா மாகாணத்தின் முன்னாள் கவர்னரும், ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதருமான நிக்கி ஹாலே கூறியதாவது: ரஷ்ய எண்ணெய் தொடர்பான டிரம்பின் கருத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஒரு தீர்வைக் காண வெள்ளை மாளிகையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இது விரைவில் நடந்தால் நல்லது.உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான பல தசாப்த கால நட்பை உறுதி செய்ய வேண்டும். வர்த்தக கருத்து வேறுபாடுகள் மற்றும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிகள் போன்ற பிரச்னைகளை கையாள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனால், மிக முக்கியமானவற்றை நாம் மறந்துவிடக் கூடாது. நமது தேவையாக இருப்பது, சீனாவை எதிர்கொள்ள, அமெரிக்காவிற்கு இந்தியாவில் ஒரு நண்பர் இருக்க வேண்டும். இவ்வாறு நிக்கி ஹாலே கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்பும் அமெரிக்காவிற்கு, இந்தியாவின் உறவு அவசியம் என நிக்கி ஹாலே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

கண்ணன்
ஆக 25, 2025 12:17

தேவையில்லை அம்மையாரே! இந்தியா எப்போதும் புத்திசாலித்தனமான கருத்துக்களை மட்டுமே வரவேற்கும் .


ManiMurugan Murugan
ஆக 24, 2025 22:52

நண்பர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் ஆபத்துக் காலத்தில் உதவுபவரா ஆபத்தை தூண்டிவிடுபவரா?அமெரிக்கா எத்தகையது என்பது உலகுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கு நன்றாகத் தெரியும். பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானுக்கு உதவும் அமெரிக்கா நட்பு நாடா? கச்சா எண்ணெய் வாங்குவதால் என்று சொல்லும் அமெரிக்கா ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்யவில்லையா?அமெரிக்காவிற்கு தடை போடலாமா. தவறாக அணுகும் அமெரிக்கா என்றும் நண்பனான இருக்க முடியாது.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 24, 2025 19:37

மறைமுக மிரட்டல் ......


R. SUKUMAR CHEZHIAN
ஆக 24, 2025 15:51

எங்களுக்கு அமெரிக்கா ஜனாதிபதியும் ஒன்றுதான் அசிம் முனீரும் ஒன்று தான். இனி எந்த அமெரிக்கா ஜனாதிபதியையும் நாங்கள் நம்பமாட்டோம்.


SUBBU,MADURAI
ஆக 24, 2025 18:59

அருமையான நெத்தியடி COMMENT SUPERB!


R. SUKUMAR CHEZHIAN
ஆக 24, 2025 15:47

நம் தேசதிற்கு எது நல்லதோ அதை திரு.மோடி அரசு செய்கிறது, இவ்வளவு ஆனபிறகும் நாம் அமெரிக்காவின் கோரிக்கைக்கு பெரியதாக செவிசாய்க்க கூடாது. அப்படியே பின்வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும் பல மடங்கு பாய்வதற்காக இருக்க வேண்டும். அமெரிக்கவை பலவீனம் படுத்த நாம் அறிவு பூர்வமாக யோசிக்க வேண்டும். இனி அமெரிக்காவை கருப்பு பட்டியலில் வைத்து உறவாடி கெடுக்க வேண்டும் உலக நன்மைக்காக. ஜெய் ஹிந்த்.


Ganesh
ஆக 24, 2025 15:40

அம்மணி... அமெரிக்காவின் ஹனிமூன் முடிந்து விட்டது... ஹா ஹா


V.Mohan
ஆக 24, 2025 14:40

அம்மா நிக்கி ஹாலே அம்மணி. உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா? உங்க கிட்ட அதிக விலை கொடுத்து ஆயில் வாங்குனா எங்க மக்களுக்கு வரியும் ரேட்டும் ஜாஸ்தி ஆகும். அது உங்களுக்கு பரவாயில்லை. ஆனா உங்க மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் அதிக பணம் கிடைக்கணும்.. இது என்னம்மா நாயம்??. நீங்க பெரிய நாடு, நிறைய பொருளும் தங்கமும் வச்சிறுக்கீங்க . அதனால உங்க கரன்சியை எவன் வேணுமின்னாலும் வாங்குவான். நாங்க ஜனங்களுக்கு நல்லது செய்யுறோம். அதுக்குத்தான் குறைஞ்ச விலையில ரஷ்ய எண்ணெயை வாங்குறோம். அந்த விலையை நீங்களும் தர மாட்டீர்கள். அப்புறம் ஏனய்ய??


Rathna
ஆக 24, 2025 14:32

அண்ணன் கமிஷன் வியாபாரத்தில் கில்லாடி. இந்தியாவிற்கு விவசாய, மீன், பால் பொருட்களை குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்து இந்திய விவசாயிகளை, மீனவர்களை, பெண்களை அளிக்க திட்டமிட்டான். அதை மோடி சம்மதிக்காததால் இந்தியா, ருஷியா எண்ணெய் வாங்குகிறது என்று திரித்து பேசி வரி விதிக்கிறான். இரண்டாவது அண்ணனின் கமிஷன், ராணுவ வியாபாரத்தில் இன்னும் அதிகம். இந்திய ராணுவ விமானங்களை, மற்றும் தடவாளங்களை வாங்க மறுத்ததால் மிரட்டி பார்க்கிறான்.


Murugesan
ஆக 24, 2025 14:20

அமெரிக்க அதிபர் தீவிரவாத நாட்டின் உற்ற நண்பனாக உள்ளார் பாகிஸ்தானிய கூட்டாளி, நம்பகமான ஆள் இல்லை


Natarajan Mahalingam
ஆக 24, 2025 13:28

அதான் ராகுல் இருக்கிறாரே, டிரம்ப் க்கு அது போதும். எங்கள் பிரதமர் மற்றும் எங்களுக்கு உற்ற நண்பன் ரஷ்யா போதும். அமெரிக்கா போன்ற துரோகிகள் தேவை இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை