உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பட்டம் தேவையில்லை; வேலை தெரிந்தால் போதும்: அசத்தல் சம்பளத்தில் வேலைக்கு அழைக்கிறார் எலான் மஸ்க்!

பட்டம் தேவையில்லை; வேலை தெரிந்தால் போதும்: அசத்தல் சம்பளத்தில் வேலைக்கு அழைக்கிறார் எலான் மஸ்க்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சாப்ட்வேர் இன்ஜினியரிங் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. பள்ளி படிப்பு, பட்டம் உள்ளிட்டவை தேவையில்லை என எக்ஸ் சமூக வலைதள உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.உலகின் முன்னணி கோடீஸ்வரர் எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர். சமூக வலைத்தள நிறுவனமான எக்ஸ் தளத்தையும் நடத்தி வருகிறார். 'டிக்டாக்' செயலியை எலான் மஸ்க் வாங்க இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சூழலில் வேலைக்கு ஆட்கள் பணியமர்த்தப் போகிறேன் என்று அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: நீங்கள் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து, பல்வேறு விதமான செயலிகளை உருவாக்க விரும்பினால், உங்களின் விவரங்களை, x.comக்கு அனுப்புங்கள்.எங்களது நிறுவனத்தில் இணைந்து விடுங்கள். நீங்கள் பள்ளிக்குச் சென்றீர்களா? நீங்கள் எந்த பெரிய பெயர் பெற்ற நிறுவனத்தில் பணிபுரிந்தீர்களா, பட்டம் படித்தீர்களா என்பது எங்களுக்கு கவலை இல்லை. உங்களது திறமையை காட்டுங்கள். இவ்வாறு எலான் மஸ்க் கூறியுள்ளார்.திறமைசாலிகளுக்கு கை நிறைய சம்பளம் அள்ளித் தருவதில் எலான் மஸ்க் தாராளமாக நடந்து கொள்வார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். மஸ்கின் இந்த அறிவிப்பு, அவர் டிக் டாக் சமூக வலைதளத்தை வாங்கி விட்டாரா என்ற சந்தேகத்தை கிளப்புகிறது என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Karthik
ஜன 16, 2025 20:13

திறமைக்கு வேலை + கூலி . இந்த டீல் நல்லாயிருக்கே ??


Kasimani Baskaran
ஜன 16, 2025 14:04

பொழுது போகாமல் cv கோர்ஸ் ஒன்று படித்தேன். என்னுடன் படித்தும் ஒருவருக்கு ஆண்டுக்கு 3 லட்சம் டாலர் சம்பளத்தில் வேலை கொடுத்தார் மஸ்க். கூடுதலாக இத்யாதி சலுகைகளும் உண்டு.


ஆரூர் ரங்
ஜன 16, 2025 12:20

யுனஸ்கோ பட்டத்தையாவது ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.


sankaranarayanan
ஜன 16, 2025 12:12

நீங்கள் எந்த பெரிய பெயர் பெற்ற நிறுவனத்தில் பணிபுரிந்தீர்களா, பட்டம் படித்தீர்களா என்பது எங்களுக்கு கவலை இல்லை. உங்களது திறமையை காட்டுங்கள். இவ்வாறு எலான் மஸ்க் கூறியுள்ளார். இனி உலகமே இப்படித்தான் போகும் வேலை நன்றாக வேலை தெரிந்தவனுக்கு வேலை செய்பவனுக்கு எங்குமே எப்போதுமே கவலை இல்லை வேலை தெரிந்தால்போன்று நடிப்பவனுக்குத்தான் இனி குட்டு


Ramesh Sargam
ஜன 16, 2025 12:05

திடீரென்று ஒரு நாள் இழப்பீடு கொடுத்து வேலையில் இருந்து துரத்திவிடுவார்.


Barakat Ali
ஜன 16, 2025 11:42

எங்கிட்டே இருக்கிறதே பட்டம்தானுங்க .... நீங்க கட்சி ஆரம்பிச்சா சொல்லியனுப்புங்க .... அது சம்பந்தமான வேலைகள் எல்லாம் தெரியும் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை