உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் நிறுத்தத்திற்கு அமெரிக்காவின் வரி விதிப்பு காரணம் அல்ல: இந்தியா உறுதி

போர் நிறுத்தத்திற்கு அமெரிக்காவின் வரி விதிப்பு காரணம் அல்ல: இந்தியா உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தானுடனான போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு அமெரிக்காவின் வரி விதிப்பு காரணம் அல்ல என மத்திய அரசு மீண்டும் உறுதிபட தெரிவித்து உள்ளது.பாகிஸ்தான் மீதான 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை கடந்த 10ம் தேதி முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் டிஜிஎம்ஓ, ஹாட்லைன் மூலம் இந்திய டிஜிஎம்ஓ.,விடம் கெஞ்சியதை தொடர்ந்து இந்த போர் நிறுத்தம் அமலானது. ஆனால், அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்த அறிவிப்பு காரணமாக இந்த போர் நிறுத்தம் அமலானது என அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இதனை இந்தியா மறுத்து வருகிறது.இந்நிலையில், மற்ற நாடுகளுக்கு எதிராக அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, அமெரிக்க அரசு, ' வரி விதிப்பு குறித்த டிரம்ப்பின் அறிவிப்புகள் காரணமாக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது' என நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது.இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: 'ஆபரேஷன் சிந்தூர்' துவங்கிய மே 7 ம் தேதியில் இருந்து போர் நிறுத்தம் அமலுக்கு வந்த 10 ம் தேதி வரை இந்தியா அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், வரிவிதிப்பு குறித்து எந்த ஆலோசனையும் நடக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

கிரீஷ்
மே 30, 2025 16:53

அப்பாவிகளை சுட்டுக்கொன்ற அந்த நாலு பேரைத் தவிர மத்த எல்லாரையும் அடிச்சி நொறுக்கிட்டோம்.


venugopal s
மே 30, 2025 10:59

இப்படி அறிக்கை வெளியிட ட்ரம்ப்பிடம் அனுமதி பெற்று விட்டீர்களா?


Kasimani Baskaran
மே 30, 2025 04:06

கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுவாயுத ஆயுதங்களை செலுத்த வல்ல ஏவுகணையை பாக்கிகள் இந்தியா மீது வீசினார்கள் - உடனே இந்தியா கொடுத்த பதில் அடியில் பாக்கிகளுக்கு சேதம் மிக அதிகமாகிவிட்டது. அமெரிக்காவிடம் சொல்லி அழுதார்கள். இந்தியா ஹாட் லைனில் அழைத்து தளபதியிடம் அழுத்துக்காட்ட பணித்தது. பாக்கிகள் செய்தார்கள். அதற்குள் டிரம்ப் சமாதானப்புறா நாங்கள்தான் என்று அறிவித்து விட்டார். ஆனால் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்பதை ஒருவரும் புரிந்துகொள்ளவில்லை. இந்தியா எந்த நொடியும் பாக்கிகளை திரும்ப அடிக்க முடியும்.


Ramesh Sargam
மே 29, 2025 22:31

போர் முற்றிலும் நிற்கவில்லை. IPL போட்டிகளில் வரும் Ceat Tyres Strategic Time Out போன்று போர் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. பாக்கிஸ்தான் மீண்டும் வால் ஆட்டினால் அவ்வளவுதான், வால் ஒட்டநறுக்கப்படும்.


Priyan Vadanad
மே 29, 2025 22:26

ஒருசில கனவு கண்டால் வெளியே சொல்லவா முடியும்?


Raja k
மே 29, 2025 22:07

போர் நிறுத்தத்துக்கு வேறு என்ன காரணம் சொல்லுங்களே உண்மை உரக்க நாட்டு மக்களுக்கு? போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் எப்படி முதன்முதலில் அறிவித்தார்? இந்தியாவுக்கு அவர்தான் அதிபரா? வணிகம் குறித்த பேசினேன் உடனே போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டு விட்டனர் என தொடர்ந்து சொல்ல என்ன காரணம்? பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதாக சொல்கிறீர்களே, பாகிஸ்தான் தரப்பில் இருந்து யார் கேட்டுக் கொண்டனர்? யாருடன் பேச்சுவார்த்தை நடந்தது? யாருடன் போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்தி கொண்டர்கள்? உடனடியாக போர் நிறுத்தம் செய்ய என்ன காரணம்? நாட்டு மக்கள் அனைவரின் விருப்பமாக அந்த சூழலில் இருந்தது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பஞ்சாப் பகுதிகளை மீட்க வேண்டும், பலூச் மக்களின் கோரிக்கை ஏற்க பட வேண்டும் என்பதே, மக்களின் எண்ணம் .அனைத்தும் இப்படி இருக்கும்போது, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் உடனடியாக போர் முடிவுக்கு வந்தது ஏன்? முதல் செய்தி அமெரிக்க அதிபரிடமிருந்து எப்படி வந்தது?


Priyan Vadanad
மே 29, 2025 22:33

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாததால்தானே நாங்கள் சுத்தி சுத்தி அடிக்கிறோம். காற்றில் கம்பு வீசுகிறோம். வெளியே சொல்லுகிற மாதிரியான கனவா கண்டோம். வெளியே சொல்லக் கூடாத ஒன்று அதாவது ரகசியமாக வைத்திருக்கப்படவேண்டிய ஒன்று அரசுகளுக்கு உண்டு. நாம்தான் புரிந்துகொள்ளவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை