உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த வேதியியலாளரும், தொழிலதிபருமான ஆல்பிரட் நோபல் பெயரில் ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மனித குலத்துக்குப் பலனளிக்கும் வகையில் செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது, உலகின் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படுகிறது. இந்தாண்டுக்கான விருது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியத்துவக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இந்தாண்டுக்கான நோபல் பரிசை இன்று (அக் 10) நார்வே குழுவினர் அறிவித்தனர். வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவித்தனர்.வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக போராடியதற்காக 2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை அறிவித்ததாக நார்வே குழுவினர் தெரிவித்தனர்.

யார் இந்த மரியா கொரினா மச்சாடோ?

* வெனிசுலா நாட்டின் பெண் போராளி மரியா கொரினா மச்சாடோ. * இவர் வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் முக்கிய அரசியல்வாதியாக திகழ்ந்து வருகிறார்.* இவர் வெனிசுலாவில் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடியவர். மக்களின் ஜனநாயக உரிமைகளை காப்பதற்கு குரல் கொடுத்துள்ளார்.* கடந்த 2024ம் ஆண்டு தேர்தலின் போது வன்முறை வெடித்தது. தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சியினர் மறுத்தனர். அப்போது நடந்த போராட்டத்தில் மரியா கொரினா மச்சாடோ கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்ட அவர் தலைமறைவாக உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நார்வே குழுவினர் பாராட்டு

உலகம் முழுக்க சர்வாதிகாரம் என்ற இருள் விலகிவரும் நிலையில், அதற்காக போராடி வரும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதே சிறப்பானதாக இருக்கும் என பரிசு அறிவித்த நார்வே குழுவினர் பாராட்டி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

ஜெய்ஹிந்த்புரம்
அக் 10, 2025 20:28

உக்ரைன் போரை ஒரு ரெண்டு மணி நேரம் நிப்பாட்டினேன்னு சொன்னதுக்கு செகண்ட் பிரைஸ் ஆவது கொடுத்துருக்கலாம்.


viki raman
அக் 10, 2025 18:39

மரியா கொரினா மச்சாடூ வாழ்க ...அமைதி வாழ்க...


sankaranarayanan
அக் 10, 2025 18:29

கரூரில் இப்போது நடந்த விபத்தைவிட இன்னும் பன்மடங்கு பேராபத்தை தடுத்து நிருத்திய நமது திராவிட மாடல் அரசின் துணை முதல்வருக்கு ஏனய்யா இந்த நோபல் பரிசு கொடுக்க வில்லை எல்லோரும் அழுங்கள்


Naresh Kumar
அக் 10, 2025 18:12

Vada pochey !!


சிந்தனை
அக் 10, 2025 16:39

இந்த நாட்டில் கோடி அழகிகள் இருந்தாலும் அதெல்லாம் அவன் கண்ணுக்கு தெரியாது அவன் சொல்லும் கொரங்கி தான் உலக அழகியாகும் அதுபோலவே இந்த நாட்டில் பல கோடி பேர் உலக நன்மைக்காக உலக அமைதிக்காக ஏற்கனவே வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களை எல்லாம் அவர்கள் பார்க்க மாட்டார்கள் அவர்கள் சொல்லும் கடகடா முடமுடாக்கள் தான் உலக அமைதிக்கான நோபல் பரிசு தகுதி பெற்றவர்கள் நல்லா இருக்கு குருடர்களின் நியாயம் இதை நாம வேற தலையில தூக்கி வச்சுக்கிட்டு கொண்டாடணுமாம் சரி நாம நல்லவங்களா இருந்தாலும் Muட்டாள் Paசங்க தானே கொண்டாடுவோம்...


ஜெய்ஹிந்த்புரம்
அக் 10, 2025 20:22

நீ உருண்டு புரளும் குண்டுச்சட்டி மட்டுமே உலகம் அல்ல, அது ரொம்ப பெருசு


Ram
அக் 10, 2025 16:36

அப்போ ஸ்டாலினுக்கு இல்லையா


JAYACHANDRAN RAMAKRISHNAN
அக் 10, 2025 16:24

ட்ரம்ப் என்ன செய்வார் இந்தியா மீது மேலும் 50 சதவிகித வரி விதிப்பார். பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை இலவசமாக செய்து கனிம வளங்கள் கேட்பார். பாகிஸ்தானை இந்தியாவுடன் போரிடும் படி சொல்லுவார். பிறகு அவரே பாக்கிஸ்தான் இடம் சொல்லி இந்தியாவிடம் கெஞ்சி போரை நிறுத்த சொல்லுவார். பிறகு இந்தியா பாகிஸ்தான் போரை வியாபாரம் காட்டி நிறுத்தி விட்டேன் இரண்டாம் முறையாக என்று சொல்லுவார். நார்வே நாட்டின் மீது வேறெங்காவது நாட்டை போரிடும் படி செய்வார். பின்னர் நார்வே நாட்டிற்கு உதவுவது போல உதவி நோபல் பரிசு கேட்பார்.


Santhakumar Srinivasalu
அக் 10, 2025 20:04

கோமாளி க்கான நோபல் பரிசு இருந்தால் கொடுக்கலாம்!


SUBRAMANIAN P
அக் 10, 2025 15:52

டிரம்புக்கு இருட்டுக்கடை அல்வா ஒரூ கிலோ பார்சல்...


RAMESH KUMAR R V
அக் 10, 2025 15:24

பாராட்டுக்கள்


சாமானியன்
அக் 10, 2025 15:14

லாரல் ஹார்டிக்கு பிறகு இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய காமெடியன் டிரம்ப்.


Ravi
அக் 10, 2025 16:12

லாரல், ஹார்டி ரெண்டு பேரும் சேர்ந்து பண்ண காமெடிய டிரம்ப் தனியாவே பண்றார் !


theruvasagan
அக் 10, 2025 17:29

நம்ம ஊர்லேயும் லாரல் ஹார்டி மாதிரி ரெண்டு காமெடியன்கள் காமெடி பண்ணிக் கொண்டிருப்பதை மறந்து விட்டீர்களே. காமெடிக்கான நோபல் பரிசு அறிவித்தால் முதலாவதாக இவர்களுக்கு கொடுக்கலாம்.


சமீபத்திய செய்தி