உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜப்பான் அமைப்புக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு!

ஜப்பான் அமைப்புக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்டாக்ஹோம்: ஜப்பானை சேர்ந்த நிஹோன் ஹிடாங்யோ என்ற அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.பிரபல விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் தலை சிறந்து விளங்கியவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு துறைக்கான அறிவிப்பும், கடந்த 7ம் தேதி துவங்கியது. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த நிஹோன் ஹிடாங்யோ என்ற அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்தை அடைவதற்காக முயற்சி செய்ததற்காகவும், அணு ஆயுதங்களை மீண்டும் ஒரு போதும் பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தியதற்காகவும் இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் பரிசு குழு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venugopal s
அக் 12, 2024 10:48

இது அநியாயம்,மணிப்பூரில் அமைதியை நிலை நாட்டியதற்காக அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்! ஏமாற்றி விட்டார்கள்!


அப்பாவி
அக் 12, 2024 03:15

நமக்கு அடுத்த வருஷம்.


Lion Drsekar
அக் 11, 2024 16:27

பாராட்டுக்கள், இப்போதுதான் 20 ஆண்டுகளுக்கு முன்பே அவரவர்கள் ஆளும் நாட்டில் புரட்சி ஏற்படுத்தி ஆட்சியையைக் காப்பாற்றும் நேரத்தில் இதுபோன்ற பரிசு பெற்றவர்கள் ஆட்சியாளர்களாக வருகிறார்கள் என்று ஊடங்களில் செய்திகள் வருகிறதே இது உண்மையாக இருந்தால் நாட்டுக்கும் உலகுக்கும் நல்லதல்ல, வந்தே மாதரம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை