உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம்: இந்திய வம்சாவளி எம்.பி., சுஹாஸ் சுப்ரமணியம் நெகிழ்ச்சி

பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம்: இந்திய வம்சாவளி எம்.பி., சுஹாஸ் சுப்ரமணியம் நெகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் காங்கிரஸ் உறுப்பினராக தேர்வாகிய இந்திய வம்சாவளியான சுஹாஸ் சுப்ரமணியம் பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம் செய்து வரலாறு படைத்தார்,ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சுஹாஸ் சுப்ரமணியம், புனித இந்து நூலான பகவத் கீதையின் மீது பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். வர்ஜீனியாவின் 13வது மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சுப்ரமணியம், அமெரிக்க கிழக்கு கடற்கரையிலிருந்து காங்கிரசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி ஆவார். உலகின் மிக சக்திவாய்ந்த அரசியல் அமைப்புகளில் ஒன்றான அமெரிக்க காங்கிரஸில் உறுப்பினராக தனது மகன் சத்தியப்பிரமாணம் செய்வதைக் கண்ட அவரது தாய் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஹிந்து அமெரிக்கரான துளசி கபார்ட்டை தொடர்ந்து, சுப்ரமணியம் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு 2வது நபராக தேர்வாகி உள்ளார்.அவரது முன்னோடியாக இருந்த கபார்ட், 2013ம் ஆண்டு கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்து, காங்கிரஸின் முதல் உறுப்பினராக இருந்தார். பகவத் கீதையின் மீது உறுதிமொழி எடுப்பது என்பது அமெரிக்காவில் உள்ள அரசியலில் ஹிந்து- அமெரிக்கர்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதற்கான அடையாளம் ஆகும்.காங்கிரஸில் தற்போதைய பதவிக்கு முன், சுப்ரமணியம் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகத்தில் கொள்கை ஆலோசகராக பணிபுரிந்தார். 2019ல் வர்ஜீனியாவின் பொதுச் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பொருளாதார மேம்பாடு மற்றும் பொது சுகாதாரம் போன்ற பல்வேறு பிரச்னைகளைக் கையாண்டார். பதவியேற்பு விழா குறித்து சுப்ரமணியம் வெளியிட்டுள்ள கூறுகையில், 'என் அம்மா இந்தியாவில் இருந்து டல்லெஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அவரது மகன் வர்ஜீனியாவை காங்கிரஸில் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று நீங்கள் கூறியிருந்தால், அவர் உங்களை நம்பியிருக்க மாட்டார்.எனது வெற்றி, தெற்காசிய மக்களுக்கும், அமெரிக்க அரசியலில் உள்ள பல இந்திய பிரதிநிதிகளுக்கும் குறிப்பிடத்தக்க சாதனை' என்றார்.சுப்ரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, காங்கிரஸில் உள்ள இந்திய வம்சாவளியினரின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இப்போது நான்காக உயர்ந்துள்ளது. மற்ற குறிப்பிடத்தக்க இந்திய- அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களில் ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா மற்றும் ஸ்ரீ தானேதர் ஆகியோர் அடங்குவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

J.V. Iyer
ஜன 08, 2025 05:22

இவர்கள் இந்தியாவை எதிர்க்காமல் இருந்தால் சரி.


அப்பாவி
ஜன 07, 2025 23:08

சரிதான். பகவத்கீதையில்.பொய் சொல்லாதேன்னு போடலியே. கடமையைச் செய்னு தானே போட்டிருக்கு.


Barakat Ali
ஜன 07, 2025 22:41

அவர் சார்ந்த மதநூல் மீது சத்திய பிரமாணம் செய்கிறார் ..... இதில் என்ன தவறு ? இந்தியாவில் ஒரு அமைச்சர் அல்லது மக்கள் பிரதிநிதி செய்தால் அது மத அடிப்படைவாதமாகப் பார்க்கப்படுகிறது ....


Kasimani Baskaran
ஜன 07, 2025 21:43

உடன் பிறப்புக்களுக்கு இந்து மத வெறுப்பு உச்சத்தில் இருப்பது அவர்கள் எழுதும் கருத்தில் வெளிப்படுகிறது. மத வெறுப்பு என்பது மதவெறியை விட கொடிய நோய். பொதுவாக சமூக தீவிரவாதிகளுக்குத்தான் அது போன்ற எண்ணம் வரும். அது அழிவின் ஆரம்பம்.


Varadarajan Nagarajan
ஜன 07, 2025 21:30

உலக நாடுகளில் ஹிந்து கலாச்சாரமும், சனாதனமும் வளர்வது மற்ற மதத்தினருக்கு அவைகளின்மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது. இங்குதான் போலி வேஷம்


Iyer
ஜன 07, 2025 20:31

வாழ்வு நெறி முறைகள், படிப்பு, மருத்துவம், விவசாயம், அரசாட்சி என்று எந்த துறையானாலும் இந்தியர்களுக்கு ஈடு இணை வேறு யாரும் இல்லை


Dhurvesh
ஜன 07, 2025 21:06

உலகம் முழுவதும் JESUS இருக்கிறார் , அல்லாஹ் வும் இருக்கிறார் ஆனால் அங்கெலாம் ஹிந்து மதம் இல்லை , இப்போ அங்கும் ஆரியன் புகுந்து கொண்டு இருக்கான் .


Ramesh Sargam
ஜன 07, 2025 20:27

தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லையா, என்று இங்குள்ள கூமுட்டைகள் கேட்கும்.


Oru Indiyan
ஜன 07, 2025 20:20

இங்கு இருக்கும் ஒரு கேடு கெட்ட கும்பலுக்கு வயிறு மட்டுமல்ல...உடம்பே எரியும்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 07, 2025 20:29

இதெல்லாம் உங்க கற்பனை தான். யாரோ எங்கேயோ கீதை மீது சத்தியப் பிரமாணம் செய்தால் யாருக்கு என்ன போச்சு? இல்ல உங்களுக்கு ஏதாச்சும் வந்துச்சா? ஏன் இப்படி காமெடி பண்றீங்க?


Sivakumar
ஜன 07, 2025 20:41

வைகுண்டேஸ்வரன் சொன்னதுதான் சரி. யாருக்கும் எங்கும் எதுவும் ஏரியால. வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்புகள் குறைந்துள்ள கவலை உண்டு. விலைவாசி உயர்ந்துள்ள கவலை உண்டு. அதைப்பத்தி யாராவது பேசினால், செய்தால் நன்றாக இருக்கும். யாரோ எங்கோ எப்படி சத்திய பிரமாணம் எடுத்தால் என்குடும்பம் வாழ்க்கைத்தரம் உயருமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை