உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 11 ராணுவ வீரர்கள் மட்டுமே பலியாம்; புளுகுமூட்டையை அவிழ்த்து விடும் பாக்.,

11 ராணுவ வீரர்கள் மட்டுமே பலியாம்; புளுகுமூட்டையை அவிழ்த்து விடும் பாக்.,

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலில், 11 ராணுவ வீரர்கள், 40 பொதுமக்கள் இறந்துள்ளதாக, அறிக்கை ஒன்றில் பாகிஸ்தான் நேற்று கூறியுள்ளது.பாகிஸ்தான் ராணுவம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், கடந்த 7ம் தேதி முதல், 10ம் தேதி வரை, இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில், 11 ராணுவத்தினர், 40 அப்பாவி பொதுமக்கள் பலியாகிஉள்ளனர். இறந்தவர்களில், பாகிஸ் தான் ராணுவத்தின் ஸ்குவாடரன் லீடர் ஒருவரும் அடக்கம். இந்திய ராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலில், பாகிஸ்தான் விமானப்படை விமானம் ஒன்றுக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது. ஆனால், நம் மத்திய அரசு 40க்கும் மேற்பட்ட பாக்., ராணுவ வீரர்களும், 100 பயங்கரவாதிகளும் கொல்லப் பட்டதை ஆதாரங்களுடன் நேற்று முன்தினம் வெளியிட்டது.

பாக்., ராணுவ தளங்கள் நாசம்

இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலில், பலத்த சேதமடைந்துள்ள பாக்., ராணுவ கட்டடங்களின் படங்கள் நேற்று வெளியாயின. அமெரிக்காவின் தனியார் சாட்டிலைட் நிறுவனமான, 'மேக்ஸார் டெக்னாலஜிஸ்' நேற்று வெளியிட்ட படங்களில், இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலால் பலத்த சேதமடைந்த பாகிஸ்தான் ராணுவ தளங்களின் கட்டடங்கள் காட்டப்பட்டுள்ளன.ராவல்பிண்டி நகரில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தளமான நுர் கான், சிந்து பகுதியில் உள்ள சுக்குர், பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் உள்ள ரஹிம் யார் கான் தளங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளதை அந்த படங்கள் காட்டுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Keshavan.J
மே 14, 2025 21:19

மற்றவர்கள் எல்லாம் தீவிரவாதம் என்னதால் செத்து விட்டார்கள்.


நிக்கோல்தாம்சன்
மே 14, 2025 18:39

இனி பாகிஸ்தானியர்கள் அவர்களின் தந்தை பெயரை குறிப்பிட்டாலும் சந்தேகம் தான் வரும்


RAJ
மே 14, 2025 16:42

அப்போ ஜமுக்காளம் போத்தி சலூட் வச்சு தூக்கிட்டி போனீங்களே...யார் அவ்விங்க்டோய்ய்..


S.L.Narasimman
மே 14, 2025 13:10

அவர்கள் ராணுவத்தின் அத்துனை பேரும் தீவிரவாதிகளாக இருக்கும் போது ராணுவத்தினர் செத்தார்கள் என்று சொன்னால் எப்படி ஏற்று கொள்வாங்க. தீவிரவாதிகள் செத்தாங்கன்னு சொன்னா ஏற்றுகொள்வார்கள்.


Anbuselvan
மே 14, 2025 10:11

நீங்கள் சொல்வது சரி. அவர்களது ராணுவமும் தீவிரவாதிகளும் பின்னி பிணைத்தவர்கள். ஆகையால் நூற்றுக்கும் மேலே எனத்தான் சொல்ல வேண்டும்.


sundar
மே 14, 2025 06:48

பொய்கிஸ்தான், கடன்கிஸ்தான்,முட்டாகிஸ்தான்,பொறுக்கிஸ்தான்,மதவெறிகிஸ்தான்,கொலைவெறிகிஸ்தான்,நாசகிஸ்தான்,


Babu
மே 14, 2025 12:59

நன்று.. நன்று.. தங்கள் கோபம் நியாயமே .. ஜெய் ஹிந்த் ..