| ADDED : ஜன 23, 2025 07:22 AM
வாஷிங்டன்: 'டிரம்ப் நிர்வாகம் இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது' என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.அமெரிக்காவுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார். அவர் இந்தியா சார்பில் அதிபர் டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். அவர் வாஷிங்டனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எனது ஒட்டுமொத்த விருப்பங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால், நான் ஒன்றைச் சொல்வேன். டிரம்ப் நிர்வாகம் பதவியேற்பு விழாவில் இந்தியாவை முன்னிலைப்படுத்த விரும்பியது. இருதரப்பு உறவுகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. பதவியேற்பு விழாவில், இந்தியா கலந்துகொள்ள டிரம்ப் நிர்வாகம் ஆர்வமாக இருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8i53rlbu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விசா தாமதங்கள்!
உலகின் வளர்ச்சிக்கு அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி பல முயற்சிகளை எடுத்தனர். அது பல வழிகளில் வெற்றி அடைந்ததை நாங்கள் கண்டோம். குவாட் அமைப்பு செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். பல்வேறு விதிமுறைகள் மற்றும் செயல் முறைகளுக்கு வரும் போது, விசாக்களின் தாமதங்கள், இந்தியாவில் மிக முக்கிய பிரச்னையாக இருக்கிறது. மக்கள் விசா பெற 400 நாட்கள் ஆகினால் உறவுகள் சரியாக இருக்காது. விசா தாமதங்கள் வணிகங்கள் மற்றும் சுற்றுலாவை மட்டும் பாதிக்காது. அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாட்டு மக்களுக்கு இடையேயான தொடர்புகளை பாதிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.முதல் வரிசை சீட்!
அதிபராக டிரம்ப் பதவியேற்பின் போது முதல் வரிசையில் அமர்ந்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, 'பிரதமர் மோடியின் சிறப்பு தூதர் இயல்பாகவே மிகவும் நன்றாக நடத்தப்படுகிறார். இதனால் அவர்கள் எனக்கு மிகுந்த மரியாதை அளித்தனர். அதிபர் டிரம்பிற்கு பிரதமர் மோடியின் கடிதத்தை வழங்கினேன்' என ஜெய்சங்கர் பதில் அளித்தார்.