உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்: ஈரானின் அணு சக்தி நிலையங்களில் 25 நிமிடம் தாக்குதல் எப்படி?அமெரிக்கா விளக்கம்

ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்: ஈரானின் அணு சக்தி நிலையங்களில் 25 நிமிடம் தாக்குதல் எப்படி?அமெரிக்கா விளக்கம்

வாஷிங்டன்: ஈரானின் அணு சக்தி நிலையங்களில், 7 B-2 குண்டுவீச்சு விமானங்கள் உட்பட 125 க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலம் 25 நிமிடங்களில் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது என அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.ஈரானின் நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் பார்டோ ஆகிய 3 அணுசக்தி நிலையங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்று பெயரிடப்பட்டது. ஈரானில் 25 நிமிடம் நடத்திய தாக்குதல் குறித்து, கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் கூறியதாவது: ஈரானுக்கு எதிரான அமெரிக்க ராணுவ நடவடிக்கையில் 7 B-2 குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தப்பட்டது.https://www.instagram.com/p/DLPHakZyt4F/இஸ்பஹானில் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. பார்டோ, நடான்ஸ் அணு மின் நிலையங்கள் மீது 14 பதுங்கு குழி வெடிகுண்டுகள் வீசப்பட்டன. 125க்கும் மேற்பட்ட விமானங்களில் இருந்து குண்டுகள் வீசப்பட்டது. குண்டு வீச்சாளர்கள் பார்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹானில் அமெரிக்க நேரப்படி நேற்று மாலை 6.40 மணிக்கு வான்வழி வாயிலாக தாக்குதல் நடத்தினர்.மாலை 5 மணியளவில் ஈரானில் உள்ள இஸ்பஹான் அணுசக்தி நிலையங்களில், நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து, குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பி-2 குண்டுவீச்சு விமானம், பார்டோ அணுசக்தி நிலையங்களில், அமெரிக்க நேரப்படி நேற்று மாலை 6.40 மணிக்கு இரண்டு பெரிய பதுங்கு குழி குண்டுகளை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டது.https://www.instagram.com/p/DLPN-ueS0n8/மீதமுள்ள குண்டுவீச்சு விமானங்கள் பின்னர் தங்கள் இலக்குகளைத் தாக்கின. பின்னர் அமெரிக்க ராணுவத்தினர் வீடு திரும்ப துவங்கினர். ஈரானுக்குள் நுழையும் போதோ அல்லது வெளியேறும் போதோ எந்த துப்பாக்கிச்சூடும் நடத்தவில்லை. இவ்வாறு 25 நிமிட தாக்குதல் குறித்து, கெய்ன் விளக்கம் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
ஜூன் 22, 2025 21:04

பலமில்லாத நாடு என்றால் ஓவராக சாத்துவார்கள்... அதுதான் அமெரிக்கா.. இஸ்ரேல் புகுந்து தாக்கிய பின்னர்தான் களமிறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. அணுஉலை மீது தாக்குதல் நடத்தியபின்னரும் கதிரியக்கம் இல்லை என்பதுதான் சுத்தமான காமெடியாக இருக்கிறது. மூன்று உலைகளும் இருந்த இடத்துக்கு 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயிரினங்கள் வாழ தகுதியில்லாதது.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 22, 2025 20:18

எங்கேய்யா உம்மோட ரைமிங் டைமிங் ? போ போயி கொலைகளை நிறுத்துங்க


புதிய வீடியோ