உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சென்சஸ் கணக்கெடுப்பில் புலம்பெயர்ந்தோரை நீக்க உத்தரவு

சென்சஸ் கணக்கெடுப்பில் புலம்பெயர்ந்தோரை நீக்க உத்தரவு

வாஷிங்டன்:அமெரிக்காவில் சட்டவிரோதமாக உள்ள புலம்பெயர்ந்தோரை நீக்கும் விதமாக, மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தகவல்களை சேகரிக்கும் முறையில் திருத்தம் செய்ய அதிபர் டெனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், சட்டவிரோதமாக தங்கியுள்ள புலம்பெயர்ந்தோரை வெளியேற்றுவதில் அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அமெரிக்காவில், 1.20 கோடி பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களை வெளியேற்ற அதிபர் டிரம்ப் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பு முறையில் மாற்றம் செய்யுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், '2024 அதிபர் தேர்தல் முடிவுகள் மற்றும் தகவல்களை பயன்படுத்தி, மக்கள்தொகை கணக்கெடுப்பு, நவீன கால உண்மைகள் மற்றும் புள்ளி விபரங்களின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படும். இதன்படி அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் விலக்கப்படுவர்' என டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில், 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கும். கடைசியாக, 2020ல் நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை