உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜப்பானில் சைக்கிள் ஓட்டும் போது மொபைல்போன் பயன்படுத்தினால் 6 மாதம் சிறை!

ஜப்பானில் சைக்கிள் ஓட்டும் போது மொபைல்போன் பயன்படுத்தினால் 6 மாதம் சிறை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டோக்கியோ: ஜப்பானில் சைக்கிள் ஓட்டும் போது மொபைல்போன் பயன்படுத்தினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.ஜப்பானில் உள்ள மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சைக்கிள் போக்குவரத்தையே பெரிதும் விரும்புகின்றனர். கோவிட் தொற்றுக்கு பிறகு, சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. கடந்த சில தினங்களாக, சைக்கிள் ஓட்டும்போது கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்தது. கடந்த ஆண்டு மட்டும் 72 ஆயிரம் சைக்கிள் விபத்துக்கள் நடந்துள்ளன. இது நாடு முழுவதும் ஏற்படும் மற்ற வாகன வாகன விபத்துகளில் 20 சதவீதம் ஆகும். சைக்கிள் விபத்துக்களை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து அரசு ஆலோசனை நடத்தியது. சைக்கிள் ஓட்டும் போது பெரும்பான்மையினர் மொபைல் போன் பயன்படுத்துவதால் விபத்து அதிக அளவு நேரிடுகிறது. இதுதான் விபத்துக்கு முக்கியமான காரணம் என தெரிய வந்தது. இதனால், போக்குவரத்து விதிகளில் புதிய திருத்தங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சைக்கிள் ஓட்டும்போது மொபைல்போன் பேசவோ, இணையத்தை பயன்படுத்தவோ கூடாது. இதனை மீறுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது சுமார் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மது போதையில் சைக்கிள் ஓட்டினாலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது சுமார் ரூ.2¾ லட்சம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு போக்குவரத்து விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
நவ 03, 2024 19:50

இங்கேயும் சட்டங்கள் இயற்றுவோம். அவை காகிதத்தில் மட்டும்தான் இருக்கும். மக்கள் அதை பாலோ பண்ணமாட்டார்கள். அரசும் கண்டுகொள்ளாது.


Ramesh Sargam
நவ 03, 2024 19:48

இங்கேயும் சட்டங்கள் இயற்றுவோம். ஆனால் அவை காகிதத்தில் மட்டும் இருக்கும். நாங்கள் அதை பாலோ பண்ணமாட்டோம்.


RAAJ68
நவ 03, 2024 16:36

புகைப்படம் அழகாக உள்ளது. அந்த காலத்து ஒடு வேய்ந்த கட்டிடம் நம்ம ஊரு போலவே உள்ளது.


Anantharaman Srinivasan
நவ 03, 2024 14:04

தமிழ்நாட்டில் கழுத்தில் இடுக்கிக்கொண்டு மோட்டர்பைக் ஸ்கூட்டர் ஓட்டினால் அபராதம் கிடையாது. அவர்கள் ஒரே நேரத்தில் இருவேலை செய்யும் சாமர்த்தியசாலிகளாக கருதப்படுவர். பெண்களும் சளைத்தவர்களல்லர்.


P. VENKATESH RAJA
நவ 03, 2024 13:27

சைக்கிள் பயணம் தான் உடல்நலத்திற்கு ஆரோக்கியமானது


yuva Kanish
நவ 03, 2024 13:24

நன்று.... இந்தியாவில் எப்போது?


சமீபத்திய செய்தி