உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லெபனான் முழுவதும் பேஜர்கள் வெடித்து ஒன்பது பேர் பலி : 2,700 பேர் காயம்:

லெபனான் முழுவதும் பேஜர்கள் வெடித்து ஒன்பது பேர் பலி : 2,700 பேர் காயம்:

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெய்ரூட்: லெபனானில் கையடக்க கருவியான பேஜர்கள் வெடித்ததில் லெபனான் எம்.பி மகன் உட்பட ஒன்பது பேர் பலியாயினர். 2,700க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர். சம்பவத்திற்கு இஸ்ரேல் தான் காரணம் என ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் குற்றம் சாட்டி உள்ளனர். லெபனான் நாட்டில் இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் தகவல் தொடர்புக்காக கையடக்க கருவியாக பேஜர்களை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் தெற்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனையில் பலர் வைத்திருந்த கையடக்க பேஜர்கள் வெடித்தது, இதை தொடர்ந்து பேஜர்களை பயன்படுத்தும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் வைத்திருந்த பேஜர்களும் தொடர்ச்சியாக வெடித்தன. இதில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் மருத்துவர்கள் என 2,700 பேர் காயமடைந்ததாகவும் ஒன்பது பேர் பலியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு அக்டோபர் முதல் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுடன் போர் நடத்திவரும் நிலையில் இன்று (செப்.,17) நடந்த சம்பவம் மிகப்பெரிய பாதுகாப்பு விதிமீறல் என ஹிஸ்புல்லா குற்றம்சாட்டியுள்ளது.பேஜர்கள் வைத்திருப்பவர்கள் உடனடியாக வெளியே வீசி எறிய வேண்டும். எனவும் அதனை பயன்படுத்த வேண்டாம் என வும் அறிவித்து நாடு முழுவதும் அவசர நிலையை லெபனான் நாடு அறிவித்து உள்ளது.இந்த வெடிவிபத்தில் ஈரான் தூதர் முஜூதாபாஅமானி என்பவர் காயமடைந்ததாகவும் லெபனான் எம்.பி.,மகன் பலியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Bala Kumaran
செப் 18, 2024 07:15

இஸ்ரேல் ஒருவேளை மதுர படம் பார்த்திருப்பங்களோ?


N.Purushothaman
செப் 18, 2024 06:41

இஸ்ரேல் வித விதமா அடிக்கிறாங்க ...டிசைன் டிசைனா கொல்றாங்க .....


நாராயணன்
செப் 18, 2024 06:07

பெரிய டெக்னாகஜி ஒண்ணுமில்லை. பேஜர்களை விக்கிறதுக்கு முன்னாடியே அதை தொறந்து சிறு அளவில் வெடி மருந்த வெச்சு வித்துட்டாங்க. பேஜர்களுக்கு விடாமல்.மெசேஜ் அனுப்பினா அது விடாம வைப்ரேட் ஆகி அதை நிறுத்துவதற்கு ஸ்டாப் பட்டனை அமுக்கும் போது பேஜர் சூடாகி வெடி மருந்து வெடிச்சிருக்கு.


karupanasamy
செப் 18, 2024 05:39

ஏலேய் உன்கிட்ட பேஜர் இருக்குதா?


Ganapathy
செப் 18, 2024 01:17

கடவுள் இஸ்ரேல் ரூபத்துல இருக்காண்டா கொமாரு...நல்லவேளை அவனுங்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் யாரும் ஊழல் செஞ்சு லஞ்சம் வாங்கி விலை போகவில்லை.


Ganapathy
செப் 18, 2024 01:15

பாத்து ஸூதானமா நடந்துக்க பப்பூ...இல்லேனா பீகாஸ் இருக்கவே இருக்கு...நீ வேற மொபைல வச்சு ஏற்கனவே ஏழறை இழுத்து வச்சுறுக்க...


Easwar Kamal
செப் 17, 2024 23:45

இதுதாண்டா இஸ்ரேலு ? நேரா அடடிக்காம sidela இருந்து அடிக்கிறது ? எப்புடி


Kumar Kumzi
செப் 17, 2024 23:04

மூனு வயசுல மதறாஸ்க்கு படிக்க அனுப்புனா அறிவு எப்படிடா வளரும்.


Sivagiri
செப் 17, 2024 22:28

எப்புட்றா ? , , எந்திரன் 2 மாதிரி இருக்கு ? , இன்னும் பேஜர் காலத்தை விட்டு வரலையா , அதான் மோடி மந்திரம் வேணும்குறது , ,


Priyan Vadanad
செப் 18, 2024 00:06

கிரிகிரிகிரிகிரியென்று ரொம்பவும் சுற்றாமல் சிவசிவன்னு இருங்கள்.


M Selvaraaj Prabu
செப் 17, 2024 22:05

//மிகப்பெரிய பாதுகாப்பு விதிமீறல் என ஹிஸ்புல்லா குற்றம்சாட்டியுள்ளது// எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி, உங்களுக்கு வந்தா ரத்தமா? தமாசு, தமாசு.


புதிய வீடியோ