உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதே நோக்கம்: ஜெய்சங்கர்

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதே நோக்கம்: ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: ஐ.நா.,வின் 79வது பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விவாத கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:அமைதியும், வளர்ச்சியும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை ஐ.நா., எப்போதும் கடைபிடித்து வருகிறது. தற்போது உக்ரைன், காசா போன்ற இடங்களில் போர் நடக்கிறது. இவை நடந்து தான் ஆகும் என உலகம் விட்டுவிட கூடாது. போர் நடக்கும் போது சர்வதேச சமூகம் உடனடி தீர்வுகளை தேடுகிறது. அந்த உணர்வுகளுக்கு மதிப்பு தந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eyklaqrl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உலகில் பல நாடுகள் தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளால் பின்தங்கியுள்ளன. ஆனால் சில நாடுகள் தெரிந்தே பேரழிவை தேர்வு செய்கின்றன. அதற்கு சிறந்த உதாரணம் எங்களின் அண்டை நாடான பாகிஸ்தான். அவர்களின் உள்நாட்டு உற்பத்தியையும், ஏற்றுமதியையும் பயங்கரவாதத்தை பொறுத்தே அளவிட முடிம்.மற்ற நாட்டுக்கு தீமை நடக்க வேண்டும் என நினைத்தவர்கள், அதே தீமை தங்கள் நாட்டை விழுங்குவதை பார்க்கின்றனர். இது தான் கர்மா. மற்ற நாட்டின் நிலத்துக்கு ஆசைப்படும் இந்த செயலற்ற நாடு குறித்து உலக நாடுகள் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த சமயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை நான் தெளிவாகக் கூறுகிறேன்.பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத கொள்கை ஒருபோதும் வெற்றி பெறாது. அவர்களின் செயல்களுக்கு நிச்சயம் விளைவுகளை சந்திப்பர். பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியை விடுவிப்பது மட்டுமே இப்போது எங்களுக்கு இடையே தீர்க்கப்பட வேண்டிய பிரச்னை.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

M.COM.N.K.K.
செப் 30, 2024 19:33

இது போன்ற செய்திகள் பெரும்பாலும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கே சரியாக பொருந்தும்.


வாசகர்
செப் 29, 2024 20:53

உள் நாட்டில் மோடி அமித். வெளி நாடுகளில் மோடி ஜெய் அமர்க்களம் விரைவில் ஜெயம் உண்டாகட்டும்


Barakat Ali
செப் 29, 2024 16:52

பலுசிஸ்தான் கூட சேர்த்துக்கொள்ளுங்கள் .....


Vijay D Ratnam
செப் 29, 2024 16:20

அடப்போங்கய்யா கேட்டு கேட்டு அலுத்துப்போயிடிச்சி.


GMM
செப் 29, 2024 09:48

பாக் ஆக்கிரமிப்பு பகுதி மீட்கும் முன் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மதத்திற்கு வழிபாட்டு அனுமதி. மக்களுக்கு நீதி வழங்க பொது சிவில் சட்டம், நாடு முழுவது ஒரே தேர்தல் , மத மக்கள் தொகை அடிப்படையில் சிறுபான்மை அந்தஸ்து நீக்கம்... போன்ற பணிகள் துவக்க நிலையில் இல்லை. தேச விரோத கருத்து கூறும் கட்சி, அமைப்பை முடக்க முடியவில்லை. இதனை செயல்படுத்த வாக்குரிமை தகுதி தற்காலிகமாக நிர்ணயிக்க வேண்டும்.


கிஜன்
செப் 29, 2024 09:24

பொதுவாக வாசகர்களின் எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலளிப்பதில்லை .... நமக்கு கருத்து கூற உரிமை உள்ளது போல .... நம்கருத்தை பிடிக்காதவர்களுக்கு எதிர்க்கவும் உரிமை உண்டு என்ற எண்ணம் தான் காரணம் ...


சிவம்
செப் 29, 2024 09:05

நல்ல விஷயம் தான். ஆனால் அமைதி மார்கதினரால் இந்தியாவிற்குள் உள்நாட்டு பிரச்சினைகள் பல உள்ளனவே. புதிய வக் ஃபோர்ட் நில ஆக்கிரமிப்பு சட்டம் இன்னும் இழுபறியில் உள்ளது. பொது சிவில் சட்டம் வரவேண்டியுள்ளது. மேலும் இவர்களால் சமீபத்தில் ஏற்பட்டு கொண்டிருக்கும் ரயில் கவிழ்ப்பு நாசவேலை போன்றவற்றிக்கு நிரந்தரமான தீர்வு, ரோஹிங்கியாகளை ஒருவர் விடாமல் திருப்பி அனுப்புதல். கேள்விப்படும் செய்திகள் உண்மையென்றால் கேரளத்தில் ஒரு இஸ்லாமிய அமைப்பு 2050 இல் இந்தியாவை இஸ்லாமிய நாடாக அறிவிக்க போகிறதாம். இந்த அமைப்பின் மேல் நடவடிக்கை போன்ற பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளதே.


enkeyem
செப் 29, 2024 08:46

நரசிம்மராவ் சொன்னது சரிதான். ஆனால் நேரு குடும்பம் அதை செய்யவில்லையே. நரசிம்மராவை இறந்தபிறகும் பழி வாங்கியதே. காங்கிரசுக்கு எதற்கு இந்த முரட்டு முட்டு மிஸ்டர் கிச்சன்?


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 29, 2024 08:29

முன்னாள் பிரதமர் திரு நரசிம்ம ராவ் அவர்கள் சிரிக்க கூட தெரியாதவர். எப்பொழுதும் ஒரு வித சிந்தனையில் உள்ளவர் போலவே இருப்பவர். குறைந்த பட்ச அளவு கூட பேசாதவர். அவர் ஒரு மெளன சாமியார். அது போலவே திரு.மன்மோகன்சிங் அவர்களும். இந்த சிறப்பு மிக்க இந்த குணங்களால் தான் இவர்களை காங்கிரஸ் சோனியா அவர்களின் பினாமியாக பிரதமர் பதவி கொடுத்து அழகு பார்த்தது. இவர் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்டெடுப்போம் என்று முழங்கியதாக கூறுவது நம்ப முடியவில்லை. ஆதாரத்துடன் கூற முடியுமா.


கிஜன்
செப் 29, 2024 09:25

In his Independence Day address, which will be scrutinized for clues about India's foreign and domestic policy agenda, Rao insisted that Pakistan quit the one-third of the disputed former Himalayan princely state that it has seized and held. “The one unfinished task is that Pakistan vacate its occupation of those areas of Kashmir which are under its control and should form part of India


raja
செப் 29, 2024 07:50

ஆகிர்மிக்கபட்ட காஷ்மீர் மட்டுமல்லாமல் இந்தியாவிடம் இருந்து வெள்ளைகாரன் பிரித்து கொடுத்த நாடுகளையும் ஒன்றிணைத்து அகண்ட பாரதத்தை அமைக்க வேண்டும் என்பதே இந்தியர்களின் நிலை...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை