வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கேவல ஜன்மம் முனிர் தன் மகளுக்கு அண்ணன் உறவு உள்ள மகனுக்கு திருமணம் செய்யும் ஜென்மம்?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முப்படை தளபதி அசிம் முனீரின் மூன்றாவது மகளுக்கு திடீரென ரகசிய திருமணம் நடத்தப்பட்டது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், முப்படைகளின் தளபதியாக இருப்பவர் அசிம் முனீர். இவரது மூன்றாவது மகள் மஹ்னுாரை, தன் சகோதரர் காசிம் முனீரின் மகனான அப்துல் ரஹ்மானுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்தார். இத்திருமணம் கடந்த வாரம் ராவல்பிண்டியில் நடந்தது. அசிம் முனீரின் மருமகன் அப்துல் ரஹ்மான் முன்பு ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றிவர் என்றும், தற்போது சிவில் சர்வீஸ் எனும் குடிமை பணிகளில், ராணுவ அதிகாரிகளுக்கான ஒதுக்கீட்டின் கீழ் உதவி ஆணையராக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தத் திருமணம் திடீரென நடந்துள்ளது; மேலும், மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டது. மிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். அதே நேரத்தில், மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் பங்கேற்றார். இவரை விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அசிம் முனீர் வரவேற்றனர். பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், துணை பிரதமர் இஷாக் தார், ஐ.எஸ்.ஐ., தலைவர் மற்றும் ராணுவ உயரதிகாரிகள், முன்னாள் ராணுவ தளபதிகள், உள்ளிட்டோர் திருமண விழாவில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேவல ஜன்மம் முனிர் தன் மகளுக்கு அண்ணன் உறவு உள்ள மகனுக்கு திருமணம் செய்யும் ஜென்மம்?