உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜம்மு காஷ்மீரில் செனாப் பாலம்... மூக்கு வியர்த்துப் போன சீனா, பாகிஸ்தான்

ஜம்மு காஷ்மீரில் செனாப் பாலம்... மூக்கு வியர்த்துப் போன சீனா, பாகிஸ்தான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜம்மு காஷ்மீரில் தயாராகி வரும் செனாப் ரயில்வே பாலம் குறித்து சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தகவல்களை சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற ரயில்வே சேவையுடன் இணைக்கும் உதாம்பூர் - ஸ்ரீநகர் - பாராமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு துவக்கியது. இதன் ஒரு பகுதியாக, காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் மீது ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான இந்த ரயில் பாலத்தின் மீது, சங்கல்தான் - ரியாசி இடையே ரயில் சோதனை ஓட்டத்தை மத்திய அரசு வெற்றிகரமாக நடத்தி காட்டியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=98xh9r27&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஐரோப்பிய நாடான பிரான்சில் உள்ள ஈபில் கோபுரத்தை விட, 115 அடி அதிக உயரத்தில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த அதிசய பாலம், 'லிம்கா' சாதனைப் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த ரயில் திட்டப் பணிகள் முழுவதுமாக முடிவடையும் பட்சத்தில், இந்தியாவின் மற்ற பகுதிகளுடனான ரயில் சேவையில் ஜம்மு காஷ்மீரும் இணைக்கப்பட்டு விடும். சாலை போக்குவரத்தை மட்டுமே நம்பியிருக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள், குளிர்காலத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டால், வாகனங்களை இயக்க முடியாத சூழல் உண்டாகும். தற்போது, செனாப் பால ரயில்வே திட்டத்தின் மூலம், அவர்களுக்கு மாற்று வழி உருவாகியுள்ளது. இந்த நிலையில், செனாப் ரயில்வே திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில், தற்போது சீனா, பாகிஸ்தான் நாடுகளுக்கு மூக்கு வியர்த்துள்ளது. குறிப்பாக, நீண்ட ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரை சொந்தம் கொண்டாடி வரும் பாகிஸ்தானுக்கு, மத்திய அரசு அங்கு மேற்கொண்டு வரும் கட்டமைப்புகள் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதனால், என்ன செய்வதென்றே திகைத்து போயுள்ளது. இந்த சூழலில், செனாப் ரயில்வே பாலம் குறித்து சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் அதிகாரிகள், தகவல்களை சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Ibrahim Ali A
நவ 03, 2024 20:15

இத்தனை ஆண்டுகளாக ரயில்வே வேலைகள் நடந்து கொண்டிருந்தது தற்போது ஒரு முடிவுக்கு ஒரு நிலையில் உள்ளது விரைவில் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் பாரதப் பிரதமர் அவர்கள் மத்திய அரசு திட்டத்தின் இது ஒரு பெயர் சொல்லும் ஒரு திட்டம் ஆகும் நன்றி மத்திய அரசுக்கு திட்டத்தில் இது ஒரு பேர் சொல்லும் திட்டமாகும்


Mohan Loganathan
நவ 03, 2024 10:54

பாராட்டுக்கள் அதே சமயம் சாதாரண பயணிகள் அன்றாடம் படும் துன்பத்தை கவனம் கொள்ள வேண்டும் மேலும் அடிக்கடி நடக்கும் ரயில் விபத்துக்கு தீர்வு காணட்டும்..


V Gandhi Rajan
நவ 01, 2024 23:12

Congratulations to our Nation ? ? ?


krishnan
நவ 01, 2024 21:57

இதை சேதப்படுத்தினால் அடுத்த நிமிஷம் பாகிஸ்தானில் அணு குண்டு தாக்குதல் நடக்க வேண்டும். இரண்டு லோக்கல் காஷ்மீர் மந்திரிகள் , 2 MLA க்கள் இந்த வண்டியில் எப்பவும் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். Sr அப்துல்லாவுக்கு ஒரு berth எப்பவும் ரேசெர்வே செய்யப்பட வேண்டும்.


krishnan
நவ 01, 2024 21:48

நம்ம அமைதி படை தரையில் சிலிண்டர் வைக்கிறாங்க ...நாம தான் உஷாரா இருக்கோணும்


கிஜன்
நவ 01, 2024 21:06

உச்ச பட்ச செக்யூரிட்டி பாலத்திற்கு ...டன்னல்களுக்கு தேவை ... 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது அவசியம் .... பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கவேண்டும் ...


muthu
நவ 01, 2024 20:54

Whatever aid provided to Jammu Kashmir , Let Muslims enjoy further and Let allah bless JK under the elected government


M Ramachandran
நவ 01, 2024 20:22

தகவல் சேகரித்து தூண்டி தீவிரா வாதிகளை விடும் புத்தி இந்தியா நன்ற்றாகவே அறியும். இது வரைய்ய பொறுமை காத்து கொண்டிருப்பது அரேபியா மற்றும் பிற உலக நாடுகள் அறிந்து கொள். வரம்பு மீறினால் முன்பு அடித்த ஆடி போல் இருக்காது. இஸ்ரேல்லை ஞ்யாபக படுத்தி கொள்ள வேண்டும். அந்த காட்சிகள் கண் முன்னே நிழலாடும். வாலறுந்த பண்ணி கூட்டம் போல சிதறி ஓடும்


Subash BV
நவ 01, 2024 18:54

Dont exaggerate. Pakistan may feel so. China much bette and higher than this, HOWEVER LETS CONGRATULATE OUR INDIAN RAILWAYS,


SUNDHARAGIRI K
நவ 03, 2024 10:58

Dont discriminate


sami
நவ 01, 2024 18:25

China's infrastructure is in another level altogether.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை