உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது: பாக்., பிரதமர்

இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது: பாக்., பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் இனியும் பிச்சை பாத்திரத்துடன் சுற்ற முடியாது. இதனை நட்பு நாடுகள் கூட ஏற்காது என அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறியுள்ளார்.கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட நட்பு நாடுகள் மட்டும் அல்லாமல் உலக வங்கி மற்றும் ஐஎம்எப் போன்ற சர்வதேச நிதியத்திடம் உதவி செய்யும்படி கெஞ்சியது. இதனையடுத்து அங்கிருந்து நிதியுதவி கிடைத்தன.இந்நிலையில், பாகிஸ்தான் குயிட்டா நகரில் ராணுவ வீரர்கள் மத்தியில் ஷெபாஸ் ஷெரீப் பேசியதாவது: பாகிஸ்தானின் அனைத்து கால கூட்டாளியாக சீனா உள்ளது. சவுதி அரேபியா நம்பகமான நட்பு நாடாக உள்ளது. துருக்கி, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமீரேட்சுக்கும் இது பொருந்தும்.அவர்களுடன் வர்த்தகம், வணிகம், வணிகம், புதுமை, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, கல்வி மற்றும் சுகாதாரம், முதலீடுகள் மற்றும் லாபகரமான முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் இப்போது எதிர்பார்க்கிறார்கள். பிச்சை பாத்திரத்துடன் அங்கு வருவதை அவர்கள் இனியும் விரும்பவில்லை.பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இயற்கை மற்றும் மனித வளத்தை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பொருளாதார நெருக்கடியை சுமக்கும் கடைசி நபராக, ராணுவ தளபதி ஆசிம் முனீருடன் இணைந்து நான் இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் இந்தியாவின் தாக்குதலால் பலத்த சேதத்தை பாகிஸ்தான் சந்தித்து உள்ளது. இச்சூழ்நிலையில், ஷெபாஷ் ஷெரீப் பேசி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ganapathi Amir
ஜூன் 07, 2025 13:15

இராணுவத்தை கலைத்துவிட்டு ... இருக்கும் ஆயுதங்களை விற்று வரும் பணத்தில் ஒழுங்கான பொருளாதார திட்டமிடலை செய்யுங்கள்..


Ramesh Sargam
ஜூன் 02, 2025 20:14

இனி நீங்க தாகத்துக்கு தண்ணீர் கேட்டாலும் அருகில் உள்ள நாடுகள் கொடுக்காது. அந்த அளவுக்கு மோசமான நாடு நீங்கள்.


ராமகிருஷ்ணன்
ஜூன் 02, 2025 06:31

நீங்க எப்படிப்பட்ட நாடகம் போட்டாலும் மோடிஜீ மன்னிக்கவே மாட்டார். உங்களால சும்மாவும் இருக்க முடியாது. வயிறு காய்ந்து பசி வெறியில் உங்க அரசையும், ராணுவத்தையும் உங்கள் மக்களே தாக்குதல் நடத்தும் நிலை வந்து பாக்கிஸ்தான் அரசு அழியும். அப்போது கூட அகதிகளாக இந்தியாவுக்கு வர விட மாட்டோம்.


kalyan
ஜூன் 02, 2025 01:54

பொருளாதாரத்துக்கு இனி மேலும் பிச்சை எடுக்க முடியாது என்று முடிவு செய்தாலும் தண்ணீருக்கு இந்தியாவிடம் கையேந்தித்தானே ஆகவேண்டும் நயினா


kalyan
ஜூன் 02, 2025 01:48

உலக வாங்கி , மற்றும் IMF தான் நீங்க கேட்காமலேயே அள்ளியள்ளி கொடுக்கறாங்களே ? நீ எதுக்கு பிச்சை எடுக்கணும் என் ராசா ?


Seenivasan
ஜூன் 02, 2025 01:33

அது பெஹல்காம் இருப்பது இந்திய மாநிலம் காஷ்மீரடா


Priyan Vadanad
ஜூன் 02, 2025 00:07

தினமலருக்கு எப்படித்தான் இந்த மாதிரியான நம்பத்தகுந்த செய்திகள் கிடைக்கிறதோ ஆச்சரியமாக இருக்கிறது. வெரி குட்.


Yaro Oruvan
ஜூன் 01, 2025 23:52

பிச்ச எடுத்ததா ஒத்துக்கிறார்பா ... பாராட்டலாம் .. அவர் சொன்ன பாயிண்ட்: இனிமே பிச்சை போட மாட்டாங்க .. எல்லாரும் உஷார் ஆயிட்டாங்க நம்ம பிச்சை பப்பு வேகாது .. ஹா ஹா உண்மைய ஒத்துக்கிட்டாங்கப்பா


Anantharaman Srinivasan
ஜூன் 01, 2025 23:34

கொழுப்பெடுத்துப்போய் யார் உங்களை பாகிஸ்தான் காஷ்மீரில் இந்தியர்களை சுட்டு கொல்ல சொன்னது..?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை