உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாக்., ராணுவ தளபதியின் மதக்கண்ணோட்டம்: ஜெய்சங்கர் சாடல்

பாக்., ராணுவ தளபதியின் மதக்கண்ணோட்டம்: ஜெய்சங்கர் சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆம்ஸ்டர்டாம்: பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், தீவிர மதக்கண்ணோட்டத்தில் இயக்கப்படுகிறார். அவரது பேச்சுக்கு பிறகு தான் காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர், என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.நெதர்லாந்து சென்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4ssrrivz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது அவர் கூறியதாவது: பஹல்காமில், சுற்றுலா பயணிகளை அவர்களின் மதத்தை உறுதி செய்த பிறகு குடும்பத்தினர் முன்பு பயங்கரவாதிகள் கொலை செய்தனர். காஷ்மீரின் முக்கிய பொருளாதாரமாக இருக்கும் சுற்றுலாத்துறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், இச்செயல் நடந்துள்ளது. வேண்டும் என்றே மத முரண்பாட்டை உருவாக்குவதற்காகவும் செய்யப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் தலைமை, குறிப்பாக அதன் ராணுவ தளபதியான ஜெனரல் அசிம் முனீர் தீவிர மதக்கண்ணோட்டத்தில் இயக்கப்படுகிறார். அவர் வெளிப்படுத்திய கருத்துக்கும், பஹல்காமில் நடந்ததற்கும் தொடர்பு உள்ளது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Barakat Ali
மே 22, 2025 20:30

முழு உண்மை .............


அப்பாவி
மே 22, 2025 20:21

அவிங்க நாட்டோட பேரே இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆஃப் பாகிஸ்தான்.


ManiK
மே 22, 2025 19:06

பாரதத்தின் உண்மை உலகத்துக்கு நன்றாக தெரியும். ஆனால் போலி மதச் சார்பற்ற மாயை மற்றும் மூர்க்கர்கள் மீது பயம் ஆகியவை வாயை அடைக்கின்றன. தனக்கு வந்தால் மட்டுமே வலி என்ற நிலையில் இருக்கும் பல நாடுகளால் தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் தாய் நாடான பக்கிஸ்தானும் வலுவான நிலையில் இருக்கின்றனர். ஆனால் பாரதத்தின் உண்மையே வெல்லும்.


Rathna
மே 22, 2025 18:55

உலகம் முழுவதும் ஜிஹாதிகள் வெறி தலை விரித்து ஆடுகிறது.


Srinivasan Krishnamoorthi
மே 22, 2025 18:33

உலகில் இருந்த ஒரே இந்து மத நாடு, இந்திரா காலத்தில் மத சார்பற்றதாக மாற்றப்பட்டது. கடைசி இந்து நாடான நேபாளம் கூட தான். 100 க்கு மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் உள்ளன. அதை விட அதிகமான கிறிஸ்தவ நாடுகள் உள்ளன. ஒரு நாடு இந்து நாடாக இருப்பதால் என்ன குறை வரப்போகிறது. இந்து மதம் எல்லா மதத்தையும் ஏற்று சகித்து கொள்வது தெரிந்தும் அறிவிலி தனமாக பேசுபவர்கள் வோட்டு வாங்கி அரசியலை நோக்கி நகர்பவர்கள் மட்டுமே


ராமகிருஷ்ணன்
மே 22, 2025 17:35

பெகல்காம் கொலைகளுக்கு காரணமான தீவிரவாதிகளை கொல்லாமல் போர் நிறுத்தம் செய்தது தவறு ஐயா. அந்த நான்கு பேரையும் கொன்று பெல்காமில் நினவு சின்னம் அமைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்த பின்னர் போர் நிறுத்தம் செய்திருக்க வேண்டும். இனியும் செய்தே ஆக வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை