உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஏவுகணை சோதனை சீண்டும் பாகிஸ்தான்

ஏவுகணை சோதனை சீண்டும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் சூழலில், 450 கி.மீ., துார இலக்கை தாக்கும் அப்தாலி ஏவுகணையை பாக்., ராணுவம் நேற்று சோதனை செய்தது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இதனால், பாகிஸ்தான் மீது அரசியல் மற்றும் ராணுவ நடவடிக்கைக்கு நம் நாடு ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் 'சிந்து -- போர் பயிற்சி' என்ற பெயரில் அப்தாலி என பெயரிடப்பட்ட ஏவுகணை சோதனையை நேற்று நடத்தியது. இந்த ஏவுகணை, 450 கி.மீ., துாரத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடியது. கராச்சி அருகே உள்ள சோன்மியானி ஏவுகணை தளத்தில் நடந்த இந்த சோதனை, வெற்றி அடைந்ததாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ