உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்; வெளிநாடுகளுக்கு குழு அனுப்ப ஏற்பாடு

இந்தியாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்; வெளிநாடுகளுக்கு குழு அனுப்ப ஏற்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: தங்கள் நாட்டின் நிலைப்பாட்டை உலக நாடுகளிடம் விளக்குவதற்காக, இந்தியாவை போலவே பாகிஸ்தானும் வெளிநாடு செல்லும் குழு அமைத்து உள்ளது.ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது, நம் ராணுவம் கடுமையான தாக்குதலை தொடுத்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dsen3bkw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது, ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையை மேற்கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்தும், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு குறித்தும், நம் நிலைப்பாடு என்ன என்பதை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கு நேரில் சென்று விவரிக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.பல்வேறு நாடுகளுக்கும் நேரில் சென்று விரிவாக விவரிப்பதற்காக, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்நிலையில், இந்தியாவை போல் பாகிஸ்தானும் வெளிநாடு செல்லும் குழு அமைத்தது உள்ளது. இது தொடர்பாக, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி கூறியதாவது:இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் அதிகரித்து வரும் பதட்டங்கள் குறித்தும், சர்வதேச அரங்கில் பாகிஸ்தானின் அமைதிக்கான வாதத்தை முன்வைக்கவும் ஒரு குழுவை வழிநடத்துமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தன்னிடம் கேட்டுக் கொண்டார். இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதிலும், இந்த சவாலான காலங்களில் பாகிஸ்தானுக்கு சேவை செய்வதில் நான் பெருமைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

spr
மே 19, 2025 03:43

"இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தினால் ஆறுகளில் ரத்த ஆறு ஓடும் என பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான பிலாவல் பூட்டோ சர்தாரி தெரிவித்திருப்பதோடு,பாகிஸ்தானில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் குவஜா ஆசீஃப், பாகிஸ்தான் கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும், அதற்கு நிதியளித்து ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறி இருந்தது குறித்துபி பேசும் போது "கடந்த காலங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரித்ததில் ஒளிவுமறைவு ஏதுமில்லை. அதற்கான விளைவுகளையும் நாம் கடுமையாக சந்திக்க வேண்டி இருந்தது. பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்த கருத்தை பொருத்தமட்டில், அதில் ஒளிவு மறைவு ஏதும் இல்லை என்றே நான் கருதுகிறேன்." என்றும் வெளிப்படையாகச் சொன்னதற்கான பரிசோ


MKUMAR
மே 18, 2025 23:56

குழு தலைவராக மசுத் அசாரை நியமியுங்கள் உறுப்பினராக ஒசாமா பின்ளேடன் மனைவி மகன்களை சேருங்க பாக்கிஸ்தான் பிரச்சினையை உலகம் புரிந்துகொள்ளும்


பல்லவி
மே 18, 2025 21:19

தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அரசைப் பார்த்து காப்பியடித்து செய்வது எளிது


R.Varadarajan
மே 18, 2025 17:09

மோடியைப்பார்த்து சுடாலின்்் அவரப்பாரத்து பக்கி ஷெரீப்் காப்பி/ ஸடிக்கர்


M Ramachandran
மே 18, 2025 16:27

கனிமொழி கூடிய சீக்கிரம் சசி தரூர் போல் மோடியின் பக்கம் எதிர் பார்க்கலாம் .


M Ramachandran
மே 18, 2025 16:25

சொந்த அறிவுக்கு பஞ்சம்.


vbs manian
மே 18, 2025 15:02

இந்தியா செய்த தவறை பாக்கும் செயகிறது. அமெரிக்கா ஈராக்கை வீழ்த்தியது. ஒசாமா பின் லதனை பாக் வரை துரத்தி சென்று காலி செய்தது. பிரிட்டன் பாக்லண்ட் தீவுகளுக்காக பல்லாயிரக்கணக்கான மைல் கடந்து அர்ஜென்டினாவோடு சண்டையிட்டது. சப்பை கட்டு கட்ட தூது குழு இவர்கள் அனுப்பவில்லை. நமது பாதுகாப்புக்காக நாம் எடுத்த நடவடிக்கயை விளக்க தூது போக அவசியமே இல்லை. இறையாண்மை உள்ள எந்த நாடும் செய்யாது.


Keshavan.J
மே 18, 2025 13:16

இந்த குழுவுக்கு தலைவர்கள் மசூதி அசார் மற்றும் ஹாபிஸ் சயீத் அனுப்புங்கள். விளங்கிடும்


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
மே 18, 2025 12:17

பாஸ் கனி, திருமா, மணி ஐயர், சீமான் எல்லோரையும் கூப்பிட்டு போங்க


Suppan
மே 18, 2025 12:46

அசோம்ல உள்ள காங்கிரஸ் MLA கௌரவ கோகையையும் கூப்பிட்டு போங்க. அவரோட பொண்டாட்டிக்கு பாகிஸ்தானிலிருந்து பணம் வருதாம். கூடவே சய்யத் நஷீர் ஹுசைன் என்ற துரோகியையும் கூப்பிட்டுக்கொண்டுபோங்க, இந்த திருடன் தேர்தல்ல ஜெயிச்ச பொழுது கூட இருந்தவனுங்க பாகிஸ்தான் ஜிந்தா பாத் னு கூச்சல் போட்டானுங்க


V Venkatachalam
மே 18, 2025 12:06

ஆஹா அப்படியா?


முக்கிய வீடியோ