உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தண்ணீர் திறந்து விடக்கோரி இந்தியாவிடம் பாக்., கெஞ்சல்

தண்ணீர் திறந்து விடக்கோரி இந்தியாவிடம் பாக்., கெஞ்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவ தளபதி, அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலவல் புட்டோ ஆகியோர் சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பாக போர் மிரட்டல் விடுத்த நிலையில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் சிந்து, ஜீலம், செனாப் நதிகளில் இருந்து நீரை வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், கடந்த ஏப்ரல் 22ல் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை மூலம், பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை நம் படைகள் அழித்தன. அதற்கு முன் உடனடி நடவடிக்கையாக, பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது. பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்கும் வகையில் சிந்து நதி குறுக்கே அணை கட்ட முடிவு செய்துள்ளது.சிந்து நதிநீர் ஒப்பந்தம், இந்தியா - பாகிஸ்தான் இடையே 1960ல் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் ஆறு நதிகளை உள்ளடக்கியது. அவை கிழக்கு நதிகள் மற்றும் மேற்கு நதிகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.கிழக்கு நதிகளில் சட்லஜ், பியாஸ், ராவி ஆகியவை உள்ளன. இந்த மூன்று நதிகளின் நீரின் உரிமையும் முழுமையாக இந்தியா வசம் உள்ளது. மேற்கு நதிகளில் சிந்து, ஜீலம், செனாப் உள்ளன. சிந்து நதி ஒப்பந்தத்தின்படி, 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு கிடைத்து வந்தது.மேற்கு நதிகளின் நீரை நம்பி தான் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் உள்ளது. லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள், குடிநீர் ஆகியவற்றுக்கு சிந்து, செனாப், ஜீலம் நதிகளின் நீரை அந்நாடு பயன்படுத்தி வந்தது. தற்போது இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்லவில்லை. மேலும், இந்தியா புதிய அணை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், 'அணை கட்டினால் தகர்ப்போம்' என நேற்று முன்தினம் பேசியிருந்தார். இதே போல் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலவல் புட்டோவும், 'சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்ற முயற்சித்தால், எங்களுக்கு போரை தவிர வேறு வழியில்லை' என, மிரட்டல் விடுத்தார்.இந்நிலையில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தண்ணீர் திறந்து விடும்படி கோரிக்கை வைத்துள்ளது.இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வரும்படி இந்திய அரசுக்கு வலியுறுத்துகிறோம்.சிந்து, செனாப், ஜீலம் ஆகிய மேற்கு நதிகளின் கீழ் பகுதியில் பாகிஸ்தான் இருப்பதால், அந்த நதிகளில் எங்களுக்கே உரிமை அதிகம் என சர்வதேச மத்தியஸ்த நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், இந்த நதியில், நீர்மின் திட்டங்களை ஒருதலைப்பட்சமாக செயல்படுத்தக் கூடாது என்றும், சர்வதேச மத்தியஸ்த நீதிமன்றம், ஆகஸ்ட் 8ல் கூறியுள்ளது.பாகிஸ்தான் பகுதிகளுக்கு நீர் பாய இந்தியா அனுமதிக்க வேண்டும் என, மத்தியஸ்த நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி நீரை திறக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்தியா எப்போதும், சர்வதேச மத்தியஸ்த நீதிமன்றத்தின் வழக்கு நடைமுறைகளையோ அல்லது தீர்ப்புகளையோ அங்கீகரித்ததில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்பாவி
ஆக 13, 2025 17:04

மோடி டிரம்ப் சந்திப்புக்கு முன்னாடி தண்ணீர் தந்து விடப்படும். பேசிட்டு வந்துட்டு பாகிஸ்தான் கெஞ்சியது. அதான் தண்ணீர் தொறந்தோம்னு பேசுவாங்க. நான் சொல்லித்தான் தொறந்தாங்கன்னு ட்ரம்ப் மெடல் குத்திக்குவாரு.


கண்ணன்
ஆக 13, 2025 16:49

ஒருவன் அமெரிகாவிலிருந்தும் மற்ற இருவர் பாலைவனஸ்தானிலிருந்தும் பெரிதாக் உதார் விட்டனரே! இப்போது ஏன் கெஞ்சலாம்? அமெரிக்கா பணத்தை அனுப்பித் தண்ணீர் வாங்கிக் கொள்ளலாம்


Nathan
ஆக 13, 2025 07:15

அவர்கள் தங்களது ஏவுகணை வீசி தண்ணீர் வரவழைத்து கொள்ள வேண்டியது தானே


Saai Sundharamurthy AVK
ஆக 13, 2025 05:25

பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் தரக் கூடாது. அப்படி கொடுத்தோமேயானால், ஆசிம் முனீரின் மிரட்டலுக்கு நாம் அடி பணிந்து விட்டோம் என்று அர்த்தம். இதையே சாக்காக வைத்து உலக நாடுகள் எள்ளி நகையாடும். அதே நேரத்தில் ராகுல்காந்தி மற்றும் நமது எதிர்கட்சிகள் எல்லாம் ஆர்ப்பரித்து பிரச்சாரம் செய்யும்.


நிக்கோல்தாம்சன்
ஆக 13, 2025 04:43

உண்மையில் பார்க்கப்போனால் அந்த கோரிக்கையை தானே பிரிண்ட் வடிவில் வெளியிட்டிருக்க வேண்டும்


muthu
ஆக 12, 2025 23:34

Let PAK try to construct desalination plant to purify sea water into drinking water instead of depending on indian water as this water required for indian muslims


Sivasankaran Kannan
ஆக 12, 2025 23:23

தீவிர வாத பன்றிகளுக்கு கொழுப்பு அடங்க வேண்டும்.. இந்தியா நிலையை மற்ற கூடாது.. இந்த போங்கிரெஸ் கரப்பான்கள் தொந்தரவு தரும்.. உள்ளூர் துரோகிகள்.


Kumar Kumzi
ஆக 12, 2025 23:05

பன்றி கூட்டம் சாகட்டும் கோமாளி டொனால்ட் டிரம்ப் கிட்ட போயி தண்ணி கேளுங்கடா


Barakat Ali
ஆக 12, 2025 22:59

அணையே கட்டினாலும் அதை எப்படி உடைக்கிறதுன்னு எங்களுக்குத்தெரியும் ன்னு பேசினதெல்லாம் ????


Easwar Kamal
ஆக 12, 2025 22:53

trumpan இடம் முறை இடலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை