உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான்: உலக சுகாதார அமைப்பில் இந்திய தூதர் கண்டனம்!

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான்: உலக சுகாதார அமைப்பில் இந்திய தூதர் கண்டனம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: பாகிஸ்தானை கடுமையாக சாடிய இந்திய தூதர் அனுபமா சிங், 'பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது,' என்று குற்றம் சாட்டி உள்ளார்.உலக சுகாதார அமைப்பில் பாகிஸ்தானுக்கு இந்தியா கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் அனுபமா சிங் பேசியதாவது: பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது. பயங்கரவாதத்தின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படுகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற திட்டத்தைத் தொடங்கியது. இதன்படி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் தாக்கப்பட்டன. பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தாமல் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். பாகிஸ்தானால் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினோம்.சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக தவறான தகவலை பாகிஸ்தான் பரப்புகிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்திய தூதர் அனுபமா சிங் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
மே 22, 2025 17:58

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது???


Ramesh Sargam
மே 22, 2025 12:53

பாக்கிஸ்தான் ஒழிந்தால் உலகில் அமைதி நிலவும். இதைப்புரிந்து கொண்டு உலகில் அமைதி விரும்பும் நாடுகள் இந்தியாவுடன் ஒத்துழைத்து பாகிஸ்தானை ஒழிக்க முன்வரவேண்டும்.


சமீபத்திய செய்தி