உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பதற்றத்தில் தடுமாறும் பாகிஸ்தான்; ஏவுகணை சோதனை நடத்தி சமாளிப்பு!

பதற்றத்தில் தடுமாறும் பாகிஸ்தான்; ஏவுகணை சோதனை நடத்தி சமாளிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்த நிலையில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. பயப்படாமல் இருப்பது போல் காட்டிக் கொள்ளவும், உள்நாட்டு மக்களை ஏமாற்றவும், இந்த சோதனையை நடத்தியுள்ளது அந்நாட்டு ராணுவம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xz3bkzru&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான் காரணம் என்பது என்.ஐ.ஏ., விசாரணையில் உறுதியாகிவிட்டது. பாகிஸ்தான் உடன் அனைத்து உறவுகளையும் இந்தியா முறித்து கொண்டது. இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. அதே நேரத்தில் எல்லை ப்பகுதியில் இரவு நேரங்களில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில் இன்று பாகிஸ்தானில் இந்தியாவுக்கு பொருட்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் பயத்தில் இருக்கும் பாகிஸ்தான் இன்று ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. 450 கி.மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் அப்தாலி ஆயுத அமைப்பின் ஏவுகணையை ஏவி பாகிஸ்தான் சோதனை நடத்தி உள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. பாகிஸ்தானின் ஏவுகணை சோதனை எல்லாம் சும்மாங்க... சரியான நேரத்தில் இந்தியா சொல்லி அடிக்கும் என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்தினருக்கு முழு சுதந்திரத்தையும் மத்திய அரசு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நுழைய தடை!

பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட கப்பல்கள் இந்திய துறைமுகத்திற்குள் நுழைய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல்களும் பாகிஸ்தானிற்குள் நுழைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

JAINUTHEEN M.
மே 03, 2025 19:35

பஹல்காமில் நடந்த கொடூர தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடே முக்கிய காரணம். அதற்கு காரணமாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் தீர விசாரித்து அவர்களை தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். போர் என்று வந்தால், இரு நாட்டு மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பது உறுதி. பாகிஸ்தானைப்பற்றி நமக்கு கவலை இல்லை. நம் நாட்டு மக்களோ, ராணுவமோ ஒருவர் உயிரிழந்தாலும் அது நமக்கு மனவேதனையை ஏற்படுத்தும் செயலாகவே இருக்கும். எனவே, மத்திய அரசு துரோகிகளை களையெடுத்து எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தினாலே, இனிமேல் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் தவிர்க்க முடியும். மத்திய அரசு பேச்சுவார்த்தை மூலம் போர் பதற்றத்தை தணித்து மக்களை நிம்மதியாக வாழச்செய்ய வேண்டும். இதுவே, நம் தேசத்தின் மீது அக்கறை உள்ள பெரும்பாண்மை மக்களின் கருத்தாக இருக்கும். ஜெய்ஹிந்த்.


Chandradas Appavoo
மே 03, 2025 18:18

நீ ஒரு தீவிரவாதி என்று தோன்றுகிறது .


thehindu
மே 03, 2025 16:56

பதற்றத்தில் அதிர்ச்சியில் தடுமாறும் இந்துமதவாத கும்பல் அடுத்தவர்களின் மேல் தப்புகண்டுபிடிக்க துடிக்கிறது


Balamurugan
மே 03, 2025 17:15

நாட்டிற்கு எதிராக பதிவிடும் இவனை யார் என்று தினமலர் அடையாளம் கண்டு NIA விடம் தெரியப்படுத்தவும்


vivek
மே 03, 2025 17:18

எச்சதின் எச்சம் thehindu


Naga Subramanian
மே 03, 2025 17:49

ஐயா, தங்களை போன்ற பொ..ற.இப்படி பேசி சந்தோஷப்படுகிறார்கள். வெளியில் நிலவரம், தாங்கள் நினைப்பது போல இல்லங்க ஐயா


Naga Subramanian
மே 03, 2025 18:21

I think you are infected with the disease called multiple father syndrome. Please check


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 03, 2025 14:55

ஏவுகணை சோதனை நடத்தினதா யாரு சொன்னாங்க ?? அவங்களே சொன்னாங்க .... நாதசு திருந்திட்டதா சொன்னது யாரு ?? அவனே சொன்னான் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை