உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார்

பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார்

பாகிஸ்தானிய திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகை ஹுமைரா அஸ்கர் அலி என்பவர் கடந்த 2015ல் இருந்து பாகிஸ்தானிய சினிமா மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சின்னத்திரை தொடர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் சமீப காலமாக பிரபலமாக இருந்த இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பூட்டிய வீட்டில் மரணமடைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவருக்கு வயது 33. இதில் அதிர்ச்சி என்னவென்றால் அவர் இறந்து கிட்டத்தட்ட 9 மாதங்கள் ஆகியுள்ளது. ஆம்.. கடந்த அக்டோபர் மாதம் ஏழாம் தேதி அவர் இறந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது கடைசி தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் அனைத்தும் அந்த தேதியுடன் நின்று உள்ளன. அதன் பிறகு யாரும் அவரை தொடர்பு கொள்ளவில்லை என்றும் தெரியவந்துள்ளது.லாகூரை சேர்ந்த ஹுமைரா சினிமாவில் நடிப்பதற்காக ஏழு வருடங்களுக்கு முன்பே கராச்சி வந்து விட்டார். தன்னுடைய குடும்பத்துடன் பெரிய அளவில் தொடர்பு இல்லாத நிலையில் அவ்வப்போது மட்டும் தானே குடும்பத்தினரை சென்று சந்தித்து வந்துள்ளார் ஹுமைரா. இதனால் ஹுமைரா இவ்வளவு நாட்கள் தொடர்பில் இல்லாததை பற்றி அவரது குடும்பத்தினரும் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை. ஹுமைராவின் வீட்டிற்கு அருகில் இருந்த வீடு காலியாக இருந்ததால் அந்தப்பகுதியில் இருந்தவர்களுக்கும் பெரிதாக துர்நாற்றம் எதுவும் அடித்ததாகவும் தெரியவில்லை.இப்போது கூட அவர் தான் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு சில மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை என்று வீட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் தான் போலீசார் தற்போது அந்த வீட்டை உடைத்து திறந்து பார்த்தபோது நடிகை ஹுமைரா இறந்து கிடந்த விஷயமே தெரிய வந்துள்ளது. இந்த தகவல் பாகிஸ்தானிய சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Natarajan Ramanathan
ஜூலை 12, 2025 00:32

அக்டோபர் ஏழுதான் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலியர்களின் இசைநிகழ்ச்சியில் புகுந்து 1200 அப்பாவி ரசிகர்களை படுகொலை செய்தநாள்.


ameen
ஜூலை 12, 2025 14:35

போராளிகள் தாக்குதல் நடத்தியது அக் 7 2023, இவள் செத்தது 2024 அக் 7, ஏதாவது சொல்லனும்னு வந்திடவேண்டியது


Natarajan Ramanathan
ஜூலை 12, 2025 00:29

பொதுவாகவே லாகூர் மற்றும் கராச்சி நகர் முழுதுமே ஒரு துர்நாற்றம் இருப்பதால் அந்தப்பகுதியில் இருந்தவர்களுக்கு பெரிதாக துர்நாற்றம் எதுவும் அடிக்கவில்லை போல.


Oviya Vijay
ஜூலை 11, 2025 19:59

இதற்குத் தான் தனிமை மிகக் கொடியது என்கிறார்கள். இந்தத் தலைமுறையில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான தொடர்புகளை வைத்திருந்தும் நேரடித் தொடர்புகள் இல்லாமல் பலரும் முடங்கிக் கிடக்கிறார்கள். ஒருவருடன் தொடர் நட்பில் இருந்தால் மட்டுமே இவ்வாறான சூழ்நிலைகளில் நம்மை தேடும் உறவுகளாக அவர்கள் இருப்பர்... யாரிடத்திலும் எந்த தொடர்பு இன்றி இருப்போமானால் இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் இவ்வாறான கொடூரமான முடிவில் மாட்டியிருப்போம்... குறைந்த பட்சம் பத்து நபர்களிடமாவது தொடர்ச்சியான தொடர்பில் இருக்கப் பாருங்கள். உங்களைப் பற்றிய நிகழ்வுகளை அவர்களிடத்தில் அடிக்கடி தெரியப்படுத்திக் கொண்டு இருங்கள். நீங்களும் அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளுங்கள்... தனிமரம் தோப்பாகாது என்பர்... நட்பை வளர்த்து வளம் பெறுங்கள்...


N Annamalai
ஜூலை 11, 2025 19:21

பாவம் .சக மனிதர்களுடன் பேசாமல் என்ன வாழ்க்கை ?.


Padmasridharan
ஜூலை 11, 2025 18:51

நட்புக்கள் என்ன ஆயின சாமி. . இத்தனை மாதங்களாக தொடர்பில் இல்லையா...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை