உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்; 3 பேர் பலி

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்; 3 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காபூல்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆப்கனின் தலிபான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியதாவது; நங்கேர்ஹர் மற்றும் ஹோஸ்ட் மாகாணாங்கள் மீது பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 பொதுமக்கள் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும், பொதுமக்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன, என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசோ, அல்லது ராணுவமோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தங்கள் நாட்டில் அவ்வப்போது தாக்குதல் நடத்தும் ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வழக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ராமகிருஷ்ணன்
ஆக 29, 2025 19:17

இந்தியா மேல் உள்ள கோபத்தை ஆப்கானிஸ்தான் மேல் காட்டி பதிலடி வாங்கி கொள்ளட்டும்


வாய்மையே வெல்லும்
ஆக 29, 2025 14:00

கெடுவான் கெடுநினைப்பான் என்கிற பழமொழி சுட்டுப்போட்டாலும் இந்த தற்குறி இம்ரான் நாட்டுக்கு வரவே வராது . இங்க இருக்கிற குறிப்பிட்ட மதத்தை கடைபிடிப்போர் பாதிபேர் பச்சை நாட்டுக்கு ஆதரவு அதுவும் நம்ம நாட்டுக்கு எதிராக.


M Ramachandran
ஆக 29, 2025 12:33

நம் மக்களுக்கு நல்லபொழுது போர்க்கு கிடை க்கும்


முக்கிய வீடியோ