உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  பாகிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ரயில் பாதைகள் தகர்ப்பு

 பாகிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ரயில் பாதைகள் தகர்ப்பு

கராச்சி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜாபர் எக்ஸ்பிரஸ் மற்றும் பிற ரயில்களை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளால், ரயில் சேவைகள் பாதிக்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தனி நாடு கோரி, உள்நாட்டு வன்முறைகள் அடிக்கடி நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அந்நாட்டில் குயட்டாவில் இருந்து பெஷாவருக்கு இயக்கப்படும் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை தடுப்பது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில், முஷ்காப், தஷ்ட் ஆகிய இருவேறு பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டுகளை நேற்று வெடிக்க செய்தனர். இதனால், ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்தன. கடந்த இரு மாதங்களில் மட்டும், ஜாபர் எக்ஸ்பிரஸ் மற்றும் போலன் மெயில் மீது குறைந்தது மூன்று முறை கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ