உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு: ஐநாவில் வழக்கறிஞரிடம் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு: ஐநாவில் வழக்கறிஞரிடம் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐக்கிய நாடுகள்: ஐக்கிய நாடுகள் சபையில் பயங்கரவாதம் தொடர்பான விவாதத்தில், வழக்கறிஞர் ஒருவர் பாகிஸ்தானை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என விமர்சித்து அந்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தினார்.மேற்காசிய நாடான கத்தார் மீது சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ox23c9jo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த தாக்குதல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் விவாதம் நடந்தது. அப்போது, மனித உரிமைகள் வழக்கறிஞரும், ஐநாவின் செயல்பாட்டை கண்காணிக்கும் அமைப்பான 'ஐநா வாட்ச்' என்ற நிறுவனத்தின் இயக்குநருமான ஹில்லெல் நியூயர் என்பவர், கடந்த 2012ல் அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பை ஆதரிக்கும் கத்தாரை விமர்சித்தார்.அவர் பேசும் போது, பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடாக கத்தார் உள்ளது. கடந்த 2011 ல் பாகிஸ்தானில் பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட போது, நீதி நிலை நாட்டப் பட்டது என ஐநா தலைவர் பாராட்டினார். ஆனால், தற்போது இஸ்ரேலை கண்டிக்கிறார் என பேசினார்.அப்போது குறுக்கிட்ட பாகிஸ்தான் பிரதிநிதிகள், ' ஹில்லெல் நியூயர் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம். எந்த உறுப்பினரும் ஐநாவின் விதிமுறைகளையும், இறையாண்மை மிக்க நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டு கொள்கைகளை மீறக்கூடாது' என்றனர்.இதனையடுத்து ஹில்லெல் நியூயரை மீண்டும் பேச அனுமதித்த ஐநா தலைவர், பேச்சு முடிய 4 நொடிகள் மட்டுமே உள்ளதாக தெரிவித்தார். அந்த நான்கு நொடியை பயன்படுத்திக் கொண்ட ஹில்லெல் நியூயர்,' தலைவர் அவர்களே, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் மற்றொரு நாடு பாகிஸ்தான், ' என்று கூறி தனது பேச்சை முடித்தார். இதனையடுத்து செய்வது அறியாது திகைத்த பாகிஸ்தான் பிரதிநிதிகள் சங்கடத்தில் ஆழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

V RAMASWAMY
செப் 13, 2025 09:22

வெட்கங்கெட்ட ஜென்மங்கள். சமீபத்தில் சீனாவில் அவமானப்பட்டது போதாதா? மற்ற தரமான இஸ்லாமிய நாடுகள் ஒருங்கிணைந்து இவர்களை ஒழுங்குபடுத்தவேண்டும், இல்லாவிடில் எல்லோரும் ஒருங்கிணைந்து இவர்களின் தீவிரவாதத்தன்மையையும பயங்ககராவத்தையும் ஒழிக்கவேண்டும் . இவர்களுக்கு எந்த ஆதரவும் உதவியும் எவரும் கொடுக்கக் கூடாது.


Iyer
செப் 13, 2025 08:39

உண்மையான மக்கள் ஆட்சி பாகிஸ்தானில் அமையும் வரை - பாகிஸ்தான் தீண்டக்கூடாத நாடாகத்தான் இருக்கும்.


RAJ
செப் 13, 2025 01:12

கத்தார் நல்ல நாடு. பாக்கிஸ்தான் கூட ஒப்பீடு செய்ய வேண்டாம்.


M Ramachandran
செப் 13, 2025 00:37

கை புண்ணய் கண்ணாடி தேவயில்லை. தானாய் போய் மாட்டிக்கொள்ளும் பாக்கிஸ்தான் அறிவற்ற செயல்களால் மூக்கறு படுவதெ வழக்கமாகக்கொண்டுள்ளது.உலக நாடுகளால் கூடிய விரையவில் தனிமையாக்க படும். அதே போலவே அரசியலில் அநாதையாக்கப்படும் அறை டிக்கெட் புழுகினி தேச விரோதி அயல் நாட்டு கைகூலி சுய நல ராகுல்.


ManiMurugan Murugan
செப் 12, 2025 22:43

பயங்கரவாதத்தை வளர்க்கவில்லை என்றால் ராணுவத்தோடு தொடர்பு இல்லை என்று சொல்லும் நபர்கள் கொல்லப்பட்ட போது ஏன் ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது பஹல்காம் தாக்குதல் ரெஸிஸ்டன்ட் என்று அவர்களே ஒத்துக்கொண்டப் பிறகும் கொல்லப்பட்டார் களுக்கு ராணுவ மரியாதை என்றால் பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகள் என்று பாகிஸ்தான் ஒத்துக் கொள்கிறது அப்படி தானே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை