உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலுக்கு பணிந்தது பனாமா

அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலுக்கு பணிந்தது பனாமா

பனாமா சிட்டி : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தொடர் மிரட்டல்களுக்கு, பனாமா நாடு அடிப்பணிந்தது. சீனாவுடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக உறுதி அளித்துள்ளது.மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் அமைந்துள்ளது பனாமா கால்வாய். கரீபியன் கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலை இணைக்கும் வகையில், 82 கி.மீ., துாரத்துக்கு அமைந்துள்ளது இந்த கால்வாய். உலகின் கடல்சார் வணிகத்தில், 5 சதவீதமும், அமெரிக்காவின் வர்த்தகத்தில், 50 சதவீதமும், இந்த கால்வாய் வழியாகவே நடக்கின்றன. உலகின் முக்கிய கடல்சார் வணிகத்துக்கான இணைப்பாக இந்த கால்வாய் உள்ளது.கடந்த, 1977ல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இந்த கால்வாயை நிர்வகிக்கும் உரிமையை பனாமாவுக்கு அமெரிக்கா வழங்கியது. அது இரு தரப்பும் பயன்படுத்துவதாக இருக்க வேண்டும். உள்நாட்டு போர் அல்லது வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கம் ஏற்பட்டால், பனாமா கால்வாயை அமெரிக்கா மீண்டும் எடுத்துக் கொள்ளும் என்பதே அந்த ஒப்பந்தம்.

பெருவழி பாதை

மேலும், 1999ல் பனாமா கால்வாயை அமெரிக்காவிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது. ஆனாலும், இதை அமெரிக்கா வலியுறுத்தாமல் இருந்து வந்துள்ளது.இந்நிலையில், 'பெல்ட் அண்டு ரோடு இனிஷியேடிவ்' என்ற சர்வதேச அளவில் நாடுகளை இணைக்கும் பெருவழிப் பாதை திட்டத்தை சீனா உருவாக்கியது. இதில், பனாமாவும் இணைந்து கொண்டது.

குற்றச்சாட்டு

அமெரிக்காவின் அதிபராக சமீபத்தில் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த திட்டத்தின் வாயிலாக, பனாமா கால்வாயை சீனா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். பனாமா கால்வாயில் சீனாவின் ஆதிக்கத்தை ஏற்க முடியாது என்றும், பனாமா கால்வாயை மீண்டும் அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் என்றும் அவர் கூறி வந்தார்.இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, தன் முதல் வெளிநாட்டு பயணமாக, பனாமா சென்றுள்ளார். அந்த நாட்டின் அதிபர் ஜோஸ் ரூயல் முலினோவை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது, அதிபர் டிரம்பின் நிலைப்பாட்டை அவர் விளக்கினார். சீனாவுடனான, பெருவழிப் பாதை திட்டத்தின் ஒப்பந்தத்தை கைவிடாவிட்டால், பனாமா மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று ரூபியோ கூறினார்.இந்நிலையில், கடந்த, 2017ல் சீனாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்கப் போவதில்லை என்று, பனாமா அதிபர் ஜோஸ் ரூயல் முலினோ உறுதியளித்தார். அமெரிக்காவின் கவலையைப் புரிந்து கொண்டு, இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Oru Indiyan
பிப் 05, 2025 20:30

உலகம் அழிய போகும் நாள் விரைவில். டிரம்ப் மற்றும் எலன் மஸ்க் ஆகியோரின் கோமாளி ஆட்டத்தால்.


sankaranarayanan
பிப் 04, 2025 08:21

டிரம்ப் போன்ற அதிபர்கள் நாட்டின் நலம் கருதி இந்தியாவிற்கு எப்போது கிடைப்பார்கள் இந்கியாவின் எல்லைகளுக்கு ஒரு நிரந்தர முடிவு கொண்டுவரவேண்டும் தேசிய மனப்பான்மை மக்களிடையே உருவாக வேண்டும் அப்போதுதான் சாமானிய மக்கள் நிம்மதியாக வாழமுடியும்


Yes your honor
பிப் 04, 2025 10:06

பப்பு போன்ற இந்தியாவின் மீது பிரியமற்ற வெளிநாடுகளை சேர்ந்த இந்திய தலைவர்கள் வழக்கொழிந்துபோய், திரு. மோடி அவர்களின் நாட்டுப்பற்றுமிக்க ஆட்சி தொடர்ந்து நடைபெறுமேயானால், இந்தியா வல்லரசு ஆவது உறுதி. அதன் பிறகு டிரம்ப் போன்று நம்மாலும் முடிவெடுக்க முடியும்.


VENKATASUBRAMANIAN
பிப் 04, 2025 08:02

இதேபோல் மோடியும் சில அதிரடி திட்டங்களை செய்ய வேண்டும். அப்போதுதான் திமுக கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் அடிபணியும்.இல்லையெனில் தேசவிரோத செயல்களை செய்வார்கள்.


Ramona
பிப் 04, 2025 09:08

உண்மையான வார்த்தைகள், ஆனால் இங்க, நாட்டுல நலனுக்காக நல்லது எதை செய்தாலும் அது கோர்ட் வாசல் கதவை தட்ட எதிர் கட்சிகள்,கங்கணம் கட்டிக்கொண்டு உள்ளன, என்ன செய்ய முடியும். கோர்ட் கூட உடனடியாக முடிவெடுக்க முடியாத நிலை. மோடி கையை கட்ட எத்தனை சக்திகள் இயங்குகின்றன அனைவருக்கும் தெரிந்த உண்மை.


Kasimani Baskaran
பிப் 04, 2025 07:15

சீனக்கப்பல்களுக்கு பத்து மடங்கு கட்டணம் என்று போட்டால் கூட ஓகே. அடக்குமுறையில் உருவான கம்முனிச தொழிலாளிகளை வைத்து உலகையே விலைக்கு வாங்க ஆர்வமாக இருக்கிறார்கள்.


J.V. Iyer
பிப் 04, 2025 04:07

ட்ரம்ப் போன்றவர்கள் உலகை ஆண்டால்தான் உலகத்தில் அமைதி ஏற்படும். ட்ரம்ப் வாழ்க.


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 04, 2025 07:14

Trump pauses Mexico and Canada tariffs - குரங்கின் கை பூமாலை தான். பிஞ்சு போன பூமாலையின் நாறை கழுத்தில் கட்டி இழுத்து தொங்கும்.


raja
பிப் 04, 2025 02:47

சூப்பர் சப்ப மூக்கு காரணுவோபள இப்படித்தான் ஒவ்வொரு விதத்திலும் வெளியேற்ற வேண்டும்...