உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாராலிம்பிக்; தமிழக வீராங்கனை நித்யஸ்ரீ வெண்கலம்; பதக்கங்களை குவிக்கும் தமிழக வீராங்கனைகள்

பாராலிம்பிக்; தமிழக வீராங்கனை நித்யஸ்ரீ வெண்கலம்; பதக்கங்களை குவிக்கும் தமிழக வீராங்கனைகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: பாரிசில் நடைபெறும் பேட்மிண்டனில் தமிழக வீராங்கனை நித்யஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கம் வென்றார். ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த 2 வீராங்கனைகள் பதக்கம் வென்று அசத்தினர்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடக்கிறது.பேட்மிண்டனில் இன்று(செப்., 03) தமிழக வீராங்கனை நித்யஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கம் வென்றார். அவர், இந்தோனேசியா வீராங்கனை ரினா மர்லினாவை 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பதக்கம் வென்று அசத்தினார்.ஏற்கனவே, மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் தமிழக வீராங்கணைகளான துளசிமதி வெள்ளி பதக்கமும், மணிஷா ராதாஸ் வெண்கல பதக்கமும் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை