உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்; இறுதிப்போட்டிக்கு மனு பாகர் தகுதி

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்; இறுதிப்போட்டிக்கு மனு பாகர் தகுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாகர், 25 மீ., பிஸ்டல் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இன்று (ஆக.,02) தகுதி சுற்றில் மனு பாகர் இரண்டாவது இடம் பிடித்து, நாளை மதியம் நடக்கும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதனையடுத்து இவர் இந்தியாவுக்கு 3வது பதக்கம் பெற்றுத் தருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மனு பாகர், தனி நபர் பிரிவில் முதல் வெண்கலம் வென்றார். பிறகு, கலப்பு இரட்டையர் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து இரண்டாவது வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இதையடுத்து நாடு சுதந்திரம் பெற்ற பிறகு ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

neelakandan yadav
ஆக 03, 2024 07:54

Beautiful


M K Balakrishnan Pillai
ஆக 03, 2024 06:53

வாழ்த்துக்கள், வாழ்க பாரதம்..


kulandai kannan
ஆக 03, 2024 06:40

விளையாட்டு தமிழக அமைச்சரால் ஒரு தமிழரையும் ஒலிம்பிக் வீரராகக்கூட உருவாக்க முடியவில்லையா?


வாசகர்
ஆக 02, 2024 22:56

வாழ்த்துக்கள் தாயே, நீங்கள் மூன்றாவது பதக்கம் பெற்று பாரதத்திற்கு பெருமை சேர்க்க இறைவன் அருள் புரியட்டும்.நாளை நீங்கள் தங்கப்பதக்கம் வெல்ல இறைவனை வேண்டுகிறேன்.


Swaminathan L
ஆக 02, 2024 19:31

அற்புதமான மனப்பாங்கு, பதட்டமில்லாத அணுகுமுறை, மிகுந்த கவனம் என்று கலக்குகிறார் மனு பாகர். இந்த போட்டியிலும் ஒரு பதக்கம் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் என்னுடைய அதிகபட்ச உழைப்பைக் கொடுப்பேன். பலன் இறைவன் விருப்பப்படி என்று எவ்வளவு அழகாக எடுத்துக் கொள்கிறார் விளைவை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை