உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைன் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு: புடினிடம் பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தல்

உக்ரைன் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு: புடினிடம் பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: ரஷ்யா - உக்ரைன் இடையிலான போருக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் புடினை சந்தித்து பேசினார்.அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் விவகாரத்தில் உங்களுடன் தொடர்ச்சியாக தொடர்பில் உள்ளேன். நான் முன்னர் கூறியதுபோல், பிரச்னைகள் அனைத்திற்கும் அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படுத்துவதற்கு நாங்கள் முழுமையான ஆதரவு அளிக்க தயாராக உள்ளோம். மனிதநேயத்திற்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்த பிரச்னையில் அமைதி ஏற்படுவதற்கு இந்தியா தேவையான உதவிகளை வழங்கும். இவ்வாறு மோடி பேசினார்.கடந்த 2022ம் ஆண்டு முதல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்காக மேற்கத்திய நாடுகள் பல பொருளாதார தடைகள் விதித்த போதும், அதனை புடின் கண்டுகொள்ளவில்லை. இந்த பிரச்னையில் இந்தியா அமைதியின் பக்கம் நிற்பதாக கூறியிருந்த பிரதமர் மோடி, இந்த விவகாரத்தில் அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யா சென்றிருந்த போதும், இரு நாடுகள் இடையில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், உக்ரைன் பிரச்னைக்கு தூதரகம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

hari
அக் 23, 2024 09:24

why dinamalar going worst to release stupid anti comments


Sivagiri
அக் 22, 2024 23:18

அமாங்க புடின் அய்யா, பேச்சுவார்த்தை நடத்துங்க, இல்ல சண்டையை போட்டு மண்டைய உடைச்சுக்கோங்க, ஏன்னா வேணாலும் பண்ணிக்கோங்க எங்களை கூப்பிடாதீங்க, நாங்க வர மாட்டோம், எங்களுக்கே ஆயிரத்தெட்டு பஞ்சாயத்து இருக்கு , அதை தீர்க்குறதே பெரிய பாடு ,., ஒங்க பஞ்சாயத்துல எங்களை இழுக்காதீங்கப்பா . . .


Priyan Vadanad
அக் 22, 2024 22:49

செய்திகளுக்கிடையில் சொருகிவைத்திருக்கும் விடியோவை மாத்திவிட்டு வேறு வீடியோ போட்டால்தான் என்ன? போகிற போக்கை பார்த்தால் இந்த வீடியோக்கு வெள்ளிவிழா கொண்டாடணும்.


Priyan Vadanad
அக் 22, 2024 22:41

மணிப்பூர் இருக்கிற திசையிலே தலை வெச்சிகூட படுக்கக்கூடாது. மணிப்பூரை நினைச்சாலே சிம்ம சொப்பனம்தான் வரும்.


Sudha
அக் 22, 2024 20:18

இந்த வலியுறுத்தல் ஒரு வீடியோ போடுங்களேன், சாதாரணதுக்கும் இந்த வலியுறுத்தலுக்கும் வித்தியாசம் தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு


Farmer
அக் 22, 2024 19:54

Same story every week... no result just talk


அப்பாவி
அக் 22, 2024 19:52

போர் துவங்கி ரெண்டு வருசம் ஆச்சு. இனிமே அது தானா நிக்க வேண்டிய நேரம் வந்தாச்சு. மேற்கத்திய நாடுகள் மட்டுமே வெல்லும். புட்டின் உயிரோட இருந்தால் ஆயுள் வரை சிறை வாசம். அங்கே ஒண்ணும் பொருளாதாரம்.பலமா இல்லை. மற்ற ஆயில் நாடுகள் அமெரிக்காவோடு கூட்டு சேர்ந்து உற்பத்தியை அதிகரித்தால், ஆயில் விலை சரிந்து நாமளும் வெளிச்சந்தையிலேயே வாங்கிர் ரஷ்யாவை கழட்டி விட்டுருவோம். ரஷ்யாவின் போர் தனிமனிதனால் நடத்தப் படுகிறது. உக்ரைனின் போர் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடத்தப் படுகிறது. ரஷ்யா வீழ்ந்தால் இன்னும் பல துண்டுகளாக்கப்படும். ஜீ பிரயத்தனித்தாலும் போரை நிறுத்த அமெரிக்கா விரும்பாது.


Palanisamy Sekar
அக் 22, 2024 19:43

மோடிஜியை தவிர உக்ரைன் பிரச்சினையை எவராலும் சுமுகமாக தீர்க்கவே முடியாது. போர் நடைபெறுகின்ற போதும் கூட அச்சப்படாமல் உக்ரைன் சென்றார் மோடிஜி. யாருக்கு வரும் இதுபோன்ற துணிவு? இந்த நேரத்திலும் குண்டுவீச்சு எங்கிருந்து வேண்டுமானாலும் வரக்கூடும் என்கிற போர் சூழலில் யாருமே செய்யத் துணியாத செயலை செய்து உக்ரைன் அதிபரை சந்தித்ததை உலக மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். உலக தலைவர்களும் இதையேதான் சொல்கின்றார்கள். மோடிஜி சொல்வதை நிச்சயம் புடின் ஏற்பார் என்றுதான் நம்புகின்றார்கள். இந்த முறை நடந்த பேச்சுவார்தையானது போர் நிறுத்தத்தின் அடுத்த கட்டத்தை எட்டிவிட்டதாக சொல்லலாம். விரைவில் புடின் மோடிஜியின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார் என்கிற செய்தியை காண்போம் விரைவில்.


Priyan Vadanad
அக் 22, 2024 22:45

இப்படி கிறுக்கு பிடிசிட்டுன்னா நாம் என்ன செய்ய முடியும். முத்தி போகுமுன்னால நாகூர் தர்காவுக்கு கொண்டு போயிடணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை