உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெப்பம் அதிகரிப்பால் அழிந்து வரும் பென்குயின்; 15 ஆண்டில் 22 சதவீதம் பலி

வெப்பம் அதிகரிப்பால் அழிந்து வரும் பென்குயின்; 15 ஆண்டில் 22 சதவீதம் பலி

லண்டன்: அன்டார்டிகாவின் பனிப்பாறைகள் மற்றும் அதை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் எம்பரர் பென்குயின்கள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. பென்குயின்களில் மிகவும் உயரமானது எம்பரர் பென்குயின் எனப்படுகிறது. இது, 4 அடி உயரம் வரை இருக்கும்.கடந்த 2009 முதல் இங்கு உள்ள பென்குயின்களின் 16 காலனிகளை பிரிட்டிஷ் அன்டார்டிகா ஆய்வு குழு, செயற்கைக்கோள் உதவியுடன் கண்காணித்து வருகிறது.பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பநிலை உயர்வு அன்டார்டிகா பனிப்பாறைகளை வேகமாக உருகச் செய்கிறது. இது பென்குயின்கள் குஞ்சு பொறிப்பை பாதிக்கிறது. 2009ல் ஆய்வாளர்கள் அன்டார்க்டிகாவில் உள்ள பென்குயின்களில் 9.5 சதவீதம் அழியும் என கணித்திருந்தனர்.தற்போது பிரிட்டிஷ் அன்டார்டிகா குழுவினர் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்து சுற்றுச்சூழல் இதழில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் முந்தைய கணிப்பை காட்டிலும் பென்குயின்கள் மிக அதிகமாக 22 சதவீதம் அளவுக்கு அழிந்துள்ளதாக கூறியுள்ளனர்.மேலும் அதில் கூறுகையில், '2022ல், அன்டார்டிகாவின் பெலிங்ஷாஸன் கடலின் மேற்பரப்பில் இருந்த பனி முன்கூட்டியே உடைந்தது. இதனால் அங்கு முட்டையிலிருந்து பொறிந்த ஆயிரக்கணக்கான பென்குயின் குஞ்சுகள் இறந்தன.'இது பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை தெளிவாக காட்டுகிறது. மேலும், கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்தப்படாவிட்டால், இந்த நுாற்றாண்டின் இறுதிக்குள் எம்பரர் பென்குயின்கள் அழிந்து போகலாம்' என அதில் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Iyer
ஜூன் 12, 2025 07:46

மனிதகுலத்தால் விலங்குகள், தாவரங்கள் மனிதகுலமே அழித்துவருகின்றன. மாமிசதால் நமது ENVIRONMENT வெப்பம் அதிகரித்து வருகிறது. 1SLAUGHTER HOUSES எல்லாவற்றையும் தடை செய்து மூடவேண்டும் 2 மாமிசம் விற்பதையும், REFRIGERATOR ல் STORE செய்து வைப்பதையும் தடை செய்யவேண்டும். 3 புகை கக்கும் வாகனங்களை உடனடியாக தடை செய்யவேண்டும். 4 நடப்பதையும் CYCLE ஓட்டுவதையும் பாடத்திட்டங்களில் புகுத்தி தினசரி வாழ்க்கையில் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை