உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போன் பேச்சு கசிவு விவகாரம்: தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா சஸ்பெண்ட்!

போன் பேச்சு கசிவு விவகாரம்: தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா சஸ்பெண்ட்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாங்காக்: போன் பேச்சு கசிவு தொடர்பாகதாய்லாந்து பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ராவை, அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம், ஜூலை 1 முதல் பிரதமர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h7k87kq1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எல்லையில் உள்ள எமரால்டு முக்கோணம் எனப்படும் பகுதியில் இரு நாடுகளுக்கிடையே மே 28ல் மோதல் ஏற்பட்டது. இதில், கம்போடியோ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.இது தொடர்பாக, கம்போடியாவின் முன்னாள் பிரதமரும், செனட் சபை தலைவருமான ஹுன் சென் உடன், தாய்லாந்து பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா 17 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினார். அப்போது பிரதமர் ஷினவத்ரா, தாய்லாந்து ராணுவ தளபதியை எதிரி என்றும், பயனற்றவற்றை பேசுவதாகவும் கூறியிருந்தார். இந்த உரையாடல்கள் கசிந்தன.இதனை தொடர்ந்து தாய்லாந்து பிரதமருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதை தொடர்ந்து வழக்கு தொடரப்பட்டது.இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்த தாய்லாந்தின் அரசியல் சாசன நீதிமன்றம், பிரதமர் ஷினவத்ரா நெறிமுறைகளை மீறியதாகக் குற்றம் சாட்டியது. மேலும் இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட இருப்பதால், பிரதமரை பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.இந்த தீர்ப்பு குறித்து ஷினவத்ரா கூறியதாவது:எனது பணிக்கு இடையூறு ஏற்படுவதை நான் விரும்ப வில்லை. நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்கிறேன். நீதிமன்ற உத்தரவால் நான் வேதனையில் உள்ளேன். இவ்வாறு ஷினவத்ரா கூறினார்.இந்நிலையில் தாய்லாந்து அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

GMM
ஜூலை 01, 2025 23:03

தகவல் கசிவிற்கு தாய் பிரதமர் மட்டும் எப்படி பொறுப்பு.? முக்கியஸ்தர் போன் பேசும் முறை நீதிக்கு புரியாது. ஆர்பாட்டம் எதற்கு என்று தெரியாமல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்த போராளிகள் உண்டு. 50 ஆண்டுக்கு பின் இந்தி எதிர்பை காட்ட தமிழ் மொழி யை அழித்த திமுகவினர் உண்டு. தாய் அரசியல் சாசன மன்றம் வாத அடிப்படையில் தீர்வு. உண்மை அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.


Anbuselvan
ஜூலை 01, 2025 21:00

விசாரணைக்கு ஒருவித இடையூறும் வரக்கூடாதுன்னு தாய்லாந்து நீதிமன்றம் அந்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரியையே இடைக்கால பதவி நீக்கம் அதாவது சஸ்பெண்ட் செய்து உள்ளது. ஆனால் இங்கோ அமைச்சர்களுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றங்கள் தயங்குவதில்லை. ஜாமினில் இருந்து வெளியே வந்தவுடன் மறுபடியும் அவரை அமைச்சராக்குகிறார்கள். பிறகுதான் நீதிமன்றம் தலையிடுகிறது. வாழ்க தமிழகம் வளர்க பாரதம்


subramanian
ஜூலை 01, 2025 20:23

உலகின் முதல் இளம் பெண் பிரதமருக்கு இப்படி ஒரு நெருக்கடி. எல்லாம் வல்ல ஈஸ்வரன் நல்லது நடக்க அருள் செய்யட்டும்.


Mecca Shivan
ஜூலை 01, 2025 18:01

seenavin உள்குத்து


Mecca Shivan
ஜூலை 01, 2025 18:02

சீனாவின் உள்குத்து


புதிய வீடியோ