உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தேர்தலில் தோற்றால் குடும்பத்துடன் அமெரிக்கா குடிபுக திட்டமா ?: ரிஷி சுனாக் மறுப்பு

தேர்தலில் தோற்றால் குடும்பத்துடன் அமெரிக்கா குடிபுக திட்டமா ?: ரிஷி சுனாக் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: வரும் பார்லிமென்ட் தேர்தலில் தனது கட்சி தோல்வியுற்றால், அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் குடிபுக திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் மறுத்தார்.பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனாக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவி காலம் 2025 ஜனவரியில் நிறைவடைகிறது. பிரிட்டன் பார்லிமென்ட்டிற்கு வரும் ஜூலை 04-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் தற்போதைய ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.இந்நிலையில் வரப்போகும் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியுற்றால், பிரதமராக உள்ள ரிஷி சுனாக், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடும்பத்துடன் குடிபுக திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகின.இது தொடர்பாக பிரிட்டனில் ஐ.டி.வி., செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், தேர்தலில் தோற்றால் அமெரிக்க குடிபுக திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. அப்படி ஒரு போதும் நான் திட்டமிடவில்லை. எனது மகளின் அமெரிக்கா படிப்பு தொடர்பாக திட்டமிட்டுள்ளதை தவறான செய்தியாக வெளியிட்டுள்ளனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Easwar Kamal
மே 29, 2024 22:52

எதுக்கு எல்லாம் அமெரிக்காவுக்கு ஓடுதுனு தெரியலை. நம் பிரிதமர் ஒரு காலத்தில் அமெரிக்கா கனவு உலகத்தில் மிதந்தார். இப்போவும் அமெரிக்கானா என்ன சந்தோசம்.


சொல்லின் செல்வன்
மே 29, 2024 22:32

ஆஷிஷ் நெஹ்ரா வோட அண்ணன் மாதிரி இருக்காப்புல


ஆரூர் ரங்
மே 29, 2024 22:02

விஸ்வரூபம் கமலஹாசனின் கருத்து என்ன? (அவரும் நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன் என்றாரே.)


தஞ்சை மன்னர்
மே 29, 2024 20:43

கவலை வேண்டாம் இங்கே ஒருத்தர் உங்க பதவி கொண்டவரும் கூடவே வருவார்


துப்புகெட்ட சுடலை
மே 29, 2024 21:59

உங்க அய்யாவா


Sathyanarayanan Sathyasekaren
மே 30, 2024 22:39

உங்களை போன்ற துரோகிகள் தான் பாக்கிஸ்தான் செல்ல வேண்டும், அங்கேயாவது நேர்மையாக நாட்டிற்கு உண்மையாக இருப்பீர்கள் என்று பார்ப்போம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை