உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லண்டனில் புறப்பட்ட சில வினாடிகளில் விமானம் விழுந்து நொறுங்கியது!

லண்டனில் புறப்பட்ட சில வினாடிகளில் விமானம் விழுந்து நொறுங்கியது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: லண்டன் சவுத்தென்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் வெடித்து சிதறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு ,242 பேருடன் கடந்த மாதம் 12ம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் இரட்டை இன்ஜின் விமானம், 600 - 800 அடி உயரமே பறந்த நிலையில், சில நிமிடங்களிலேயே கீழே வெடித்து சிதறியது. இதில் ஒரேயொரு பயணியை தவிர, குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உட்பட 275 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்திற்கு எரிபொருள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதே காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், லண்டன் சவுத்தென்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் வெடித்து சிதறி விபத்தில் சிக்கி உள்ளது. ஈஸி ஜெட் நிறுவனத்தின் இந்த சிறிய விமானம் நெதர்லாந்தில் உள்ள லெலிஸ்டாட் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தது. இந்த சிறிய விமானம் 12 மீட்டர் நீளம் கொண்டது.ஒவ்வொரு வாரமும் 20 வழித்தடங்களில் 122 விமானங்களை ஈஸி ஜெட் இயக்குகிறது. விபத்தைத் தொடர்ந்து, பாரிஸ், அலிகாண்டே, பாரோ, பால்மா, மல்லோர்கா ஆகிய இடங்களுக்கான விமானங்களை ஈஸி ஜெட் ரத்து செய்துள்ளது. விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் அல்லது அவர்களின் நிலை குறித்து விபரங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

spr
ஜூலை 14, 2025 17:51

ஆமதாபாத் விமான விபத்து குறித்த விசாரணையின் உண்மையான முடிவு, விமான உற்பத்தி நிறுவனம் தொடர்பான ஒன்றாக இருந்தால் பெரும்பாலும் வெளிவராது


Kalyan Singapore
ஜூலை 14, 2025 13:52

விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் விமானத்தின் எரிபொருள் ஸ்விட்சை விமானிகள் அணைத்தனர் என்று கருதுவது அவர் மீது அநியாயமாக பழிசுமத்தும் செயலாகும். "ஏன் அணைத்தீர்கள் என ஒருவிமானி கேட்டதற்கு நான் அணைக்கவில்லை என மற்றைய விமானி பதில் அளித்ததிலிருந்து அவர்கள் அணைக்கவில்லை என தெளிவாக தெரிகிறது. Landing Gear ல் உள்ள ஒரு சுவிட்ச் விமானம் தரையில் உள்ளதா வானில் உள்ளதா விமானத்தின் தானியங்கி மையத்திற்கு தெரியப்படுத்தும் . அது வேலைசெய்யாவிட்டால் தானியங்கி மையம் எரிபொருள் விசையை அனைத்து விடும் . அந்த ஒரே ஒரு சுவிட்ச் வேலை செய்யாமல் தவறான தகவல் தானியங்கி மையத்திற்கு செல்வது பாதுகாப்பு விதிகளின் படி தவறான கட்டமைப்பு . அது நிரூபிக்கப்பட்டு விட்டால் இப்போதைய அறிக்கையில் என்ன நடந்தது என்று தான் கூறப்பாட்டிருக்கிறது எதனால் நடந்தது என்று ஆய்வுசெய்ய பல மாதங்கள் ஆகலாம் குற்றவாளி போயிங் நிறுவனம் என்பது உறுதி ஆகி விடும்


Ramesh Sargam
ஜூலை 14, 2025 12:39

இந்த விபத்தில் சிக்கிய விமானத்திலும் எரிபொருள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததா? முறையான பயிற்சியின்மை, முறையான பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் உலகெங்கிலும் விமான விபத்துக்கள் தொடர்ந்து நடக்கிறது.


Nada Rajan
ஜூலை 14, 2025 11:51

அடிக்கடி விமான விபத்து நடக்கிறது... இதனை தடுக்க வேண்டும்


சமீபத்திய செய்தி