உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கானா சென்றடைந்தார் பிரதமர் மோடி: விமான நிலையத்தில் வரவேற்றார் அதிபர்

கானா சென்றடைந்தார் பிரதமர் மோடி: விமான நிலையத்தில் வரவேற்றார் அதிபர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அக்காரா: அரசு முறை பயணமாக பிரதமர் மோடி கானா நாட்டிற்கு சென்றடைந்தார். விமான நிலையம் வந்த அந்நாட்டு அதிபர் மஹாமா வரவேற்றார்.கானா,டிரினிடாட் டுபாக்கோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்று பயணம் மேற்கொள்கிறார்.முதற்கட்டமாக ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றார். அக்காராவில் விமான நிலையத்திற்கு வந்த அந்நாட்டு அதிபர் மஹாமா பிரதமர் மோடியை வரவேற்று அழைத்து சென்றார். அங்கு மோடியை கவுரவிக்கும் வகையில் 21 குண்டுகள் முழக்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். கடந்த 3 தசாப்தத்தில் கானா நாட்டிற்கு செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ள பிரதமர் மோடியை பார்க்க, அங்கு வசிக்கும் இந்தியர்கள் ஒன்று கூடினர். மோடியின் பெயரை உற்சாகமாக கோஷம் போட்டு வரவேற்றனர். அவர்களை நோக்கி கையசைத்து அவர்களின் வரவேற்பை மோடி ஏற்றுக் கொண்டார். ' ஹரே கிருஷ்ணா ' பாடலை பாடியும் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

kannan
ஜூலை 04, 2025 13:37

பிரதமர் நரேந்திர மோடி 2014 முதல் 2025 வரை 73 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். உலகில் ஐநா உறுப்பு நாடுகள் 193 உள்ளன. எனவே, அவர் இன்னும் 120 நாடுகளுக்கு பயணிக்கவில்லை.


kannan
ஜூலை 03, 2025 02:52

இவர் போகாத நாடு எது?


Arunkumar,Ramnad
ஜூலை 03, 2025 07:13

எம்புட்டு அறிவான கேள்வியை கேக்குது பாருங்க...


ஷாலினி
ஜூலை 02, 2025 22:28

பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்


venugopal s
ஜூலை 02, 2025 22:18

அமித்ஷா கூறியது போல் பிரதமர் மோடி அவர்கள் ஆங்கிலத்தில் பேச வெட்கப்பட்டு கானா அதிபருடன் ஹிந்தியில் பேசி இருப்பாரோ?


guna
ஜூலை 03, 2025 06:21

ஏட்டு சுரக்காய் வேணுகோபால்


vivek
ஜூலை 03, 2025 06:23

உன் துண்டு சீட்டு அறிவுக்கு இதோ அதிகம் வேணுகோபால்


vadivelu
ஜூலை 03, 2025 06:25

ஆமாம் இந்தியில் பேசி இருப்பார், கானா அதிபருக்கும் இந்தி தெரியும். ஆங்கிலம் கானா அதிபருக்கும் தெரியாதாம். மோடி குடும்பத்துடன், நண்பர்களுடன் முதலீடுகளை ஈர்க்க செல்லாததால் பல மொழிகளை அறிந்த நபர்கள் இல்லை, அதனால் இந்தி, தமிழ் மொழிகளில் பேசி கொண்டனர். ஆமென்.


SUBBU,MADURAI
ஜூலை 03, 2025 07:15

பதநீரில் சர்க்கரை போட்டுருக்கீங்களா என்று கேட்ட அறிவாளி தலைவனின் அல்லக்கைதானே!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை