உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அபுதாபியில் இந்து கோயிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி:

அபுதாபியில் இந்து கோயிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி:

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அபுதாபி ; ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் இந்து கோவிலான சுவாமி நாராயன் கோவிலை திறந்தார் பிரதமர் மோடி. மஹந்த் சுவாமி மகராஜ் சிறப்பு பூஜைகள் செய்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.அபுதாபி சுவாமி நாராயன் கோவில் வடஇந்தியர்களின் நாகரா பாணியில் கட்டப்பட்டிருந்தாலும், இந்தியா-ஐக்கிய அரபு அமீரக்கதின் கலையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி அபுதாபி சென்றிருந்தபோது, பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபியில் கோவில் கட்ட, 13.5 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார். இத்துடன் கூடுதலாக, 13.5 நிலத்தை அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் கடந்த, 2019ம் ஆண்டு கொடுத்தது. இதனையடுத்து 27 ஏக்கர் நிலத்தில் சுவாமி நராயண் கோயில் கட்ட நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u2lunhwt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய இந்து கோயிலாக அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான கோயிலில் ஒரே நேரத்தில் 10000 பேர் வரை தங்கலாம். இன்று இக்கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். முன்னதாக மஹந்த் சுவாமி மகராஜ் சிறப்பு பூஜைகள் செய்தார். தொடர்ந்து பிரமாண்ட கோயிலை நாட்டிற்கு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. விழாவில் ஆன்மீக தலைவர்கள், பல நாட்டில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு அம்சங்கள்;

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கும் சுவாமி நாராயன் கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது.* இக்கோவில் வடஇந்தியர்களின் நாகரா பாணியில் கட்டப்பட்டிருந்தாலும், இந்தியா-ஐக்கிய அரபு அமீரக்கதின் கலையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது* கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி அபுதாபி சென்றிருந்தபோது, பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபியில் கோவில் கட்ட, 13.5 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார்.* இத்துடன் கூடுதலாக, 13.5 நிலத்தை அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் கடந்த, 2019ம் ஆண்டு கொடுத்தது* இதனையடுத்து 27 ஏக்கர் நிலத்தில் சுவாமி நராயண் கோயில் கட்ட நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.* இக்கோயில் இளஞ்சிவப்பு ராஜஸ்தான் மணற்கல் மற்றும் வெள்ளை இத்தாலிய மார்பிள் கல் ஆகியவற்றால் கட்டப்பட்டுள்ளது* ராஜஸ்தானிலிருந்து சுமார், 7 லட்சம் செங்கற்கள் அபுதாபிக்கு கொண்டு செல்லப்பட்டன* மொத்தம், 7 கோபுரங்கள் இருக்கின்றன; இந்த கோபுரங்கள் அனைத்தும் அபுதாபியின் சிறந்த கட்டடங்களின் அடையாளமாக திகழ்கிறது * நிலநடுக்கம், மற்றும் அதீத வெப்பத்தினால் பாதிக்கப்படாமல் இருக்க, 300 சென்சார்கள் கோவிலுக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ளன* இங்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால், கோவிலை குளுமையாக வைத்துக்கொள்ள நானோ டைல்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது* கோவிலின் பெரும்பாலான பகுதிகளை கட்ட இரும்பு அல்லாத பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன* கோவிலின் உட்புறத்தை பொறுத்த அளவில், ராமாயணம் மற்றும் மகாபாரதம் உட்பட இந்தியாவில் இருந்து 15 கதைகள் தவிர, மாயன், ஆஸ்டெக், எகிப்திய, அரபு, ஐரோப்பிய, சீன மற்றும் ஆப்பிரிக்க நாகரிகங்களின் கதைகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன* இக்கோவிலை கட்டி முடிக்க சுமார், 700 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.* போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா(BAPS) சார்பில் இக்கோவில் கட்டப்பட்டிருக்கிறது. * ஒரே நேரத்தில் 3000 பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.*கோயிலில் உள்ள 7 கோபுர ங்கள் யு.ஏ.இ.,ல் உள்ள 7 எமிரேட்ஸ்-களை குறிக்கின்றன. * கோயில் கட்டுமானத்தில் இரும்பு கம்பிகள் பயன்படுத்தப்படவில்லை சிறப்பு தொழில்நுட்பத்தின் கீழ் கோயில் உறுதி தன்மையுடன் கட்டப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ