உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எகிப்தில் நாளை கையெழுத்தாகும் காசா அமைதி ஒப்பந்தம்: பிரதமர் மோடிக்கு அழைப்பு

எகிப்தில் நாளை கையெழுத்தாகும் காசா அமைதி ஒப்பந்தம்: பிரதமர் மோடிக்கு அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எகிப்தில் அதிபர் டிரம்ப் முன்னிலையில் இஸ்ரேல்- ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு வந்தது. இதனால் பிரதமர் மோடிக்கு பதில் மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பங்கேற்க உள்ளார்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வந்தது. தற்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சியால், போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து பாலஸ்தீனர்கள் காசாவின் வடக்கு பகுதியை நோக்கி தங்கள் பயணத்தை துவக்கியுள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், காசாவில் இருந்து இஸ்ரேலியப் படைகள் திரும்பத் துவங்கியுள்ளன. காசா போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்தில் நாளை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், அதிபர் டிரம்ப் முன்னிலையில் இஸ்ரேல்- ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி உட்பட 20 நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.அந்த வகையில் பிரதமர் மோடிக்கு நாளை நடைபெற உள்ள மாநாட்டுக்கு எகிப்து அதிபரும், அமெரிக்க அதிபர் டிரம்பும் அழைப்பு விடுத்திருப்பதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதனால் இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடிக்கு பதில் மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பங்கேற்க உள்ளார். எகிப்தில் நாளை நடக்க அமைதி உச்சி மாநாட்டிற்கு அதிபர் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா தலைமை தாங்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

மணிமுருகன்
அக் 13, 2025 00:03

அருமை அமைதி தொடர வேண்டுகிறேன் மனித வீராப்பொன் காரணமாக மனித குலம் அழிக்கப்பட்டுள்ளது இனி இது தொடரக்கூடாது


R Dhasarathan
அக் 12, 2025 15:51

மிக சரியான நேரத்தில் சரியான பதிலடி. எப்பவும் நம்மை கிள்ளு கீரை என்ற நினைப்பு.


Field Marshal
அக் 12, 2025 15:14

பிரகாஷ்ராஜ் ,,சத்யராஜ் ..முயற்சிக்கு கிடைத்த வெற்றி ... ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லையா ?


Sun
அக் 12, 2025 14:37

ஆமா மோடிக்கு எதுக்கு அழைப்பு ? இதல் எதிர்காலத்தில் எதாச்சும் பிரச்சனைனா நீ தானே ஜாமீன் கையெழுத்து போட்டேனு நாளைக்கு கோர்த்து விடுறதுக்கா? டிரம்பு முன்னாடி இந்தியாவுக்காக இந்தியா அனுப்பிய ஆள் தெரியுமா? கீர்த்தி வர்த்தன் சிங் அவரு எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? யாருக்கு தெரியும்? நாளைக்கு டிவிய பார்த்துதான் தெரிஞ்சுக்கனும்.


N Sasikumar Yadhav
அக் 12, 2025 14:15

உலகம் அமைதியாக இருக்க இறைவன் அருள்புரிய வேண்டும் சர்வம் கிருஷ்ணார்ப்பணம்


ASIATIC RAMESH
அக் 12, 2025 14:08

நல்லவேளை.. நம் பிரதமர் நேரில் செல்லவில்லை. இது ஏதோ சாட்சிக்கு சிலரை அழைப்பதுபோல் உள்ளது... பாக்கியையும் அழைத்திருப்பார்கள்... ஏதோ அமைதி நிரந்தரமாக இருந்தால் நல்லது.


Ramesh Sargam
அக் 12, 2025 14:06

காசாவுக்காக கண்ணீர் சிந்திய எங்கள் தமிழக முதல்வருக்கு அழைப்பு இல்லையா?


கடல் நண்டு
அக் 12, 2025 13:55

உலக அரங்கில் இந்தியாவில் மதிப்பு உயர்ந்து வருகிறது.. ஆனால், இங்கு திராவிடம் என்ற போர்வையில் கம்பு சுத்தும் உபி களுக்கு இது புரிவதில்லை ..


ஆதிநாராயணன்
அக் 12, 2025 13:42

உலக அமைதிக்காக(ஓட்டுக்காக) போராட்டம் நடத்திய ஸ்டாலின் அவர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்க வேண்டும்


Venkatesan Srinivasan
அக் 12, 2025 22:47

சுதலை போட்ட சத்தத்தில் தான் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. சுதலை பராக்கிரமம் மத்திய கிழக்கு வரை பரவியுள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை