உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிட்டன் மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு

பிரிட்டன் மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடி , அந்நாட்டு மன்னர் சார்லசை சந்தித்து பேசினார்.பிரதமர் மோடி அரசு முறை பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் கெயிர் ஸ்டார்மரை சந்தித்து பேசினார்.அப்போது இரு நாடுகளுக்கு இடையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.இதனைத் தொடர்ந்து சாண்ட்ரிங்ஹாம் இல்லத்தில் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். மோடியை சார்லஸ் வரவேற்றார். அப்போது, மரக்கன்று ஒன்றை சார்லசுக்கு பிரதமர் மோடி வழங்கினார்.சுற்றுச்சூழலை ஊக்குவிக்க பிரதமர் துவக்கி வைத்த “Ek Ped Maa Ke Naam” திட்டத்தில் மன்னர் ஈர்க்கப்பட்டார் என அரச குடும்பம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
ஜூலை 25, 2025 07:59

எல்லோரும் ஸ்காட்ச் வாங்கி குடிச்சிட்டு சந்தோஷமா இருக்கணும்னு ஒப்பந்தம் போட்டிருக்கோம் ஹை.


Sakthi,sivagangai
ஜூலை 25, 2025 12:54

இதை முதலில் ....


நிக்கோல்தாம்சன்
ஜூலை 25, 2025 04:31

இன்னமும் மன்னராட்சி ? இதனை மோடி அவர்கள் செய்ததிற்காக வருந்துகிறேன் , இந்தியாவை துண்டாட துடிக்கும் பிரிட்டன் , அமேரிக்கா போன்றவை ஒழியும் நாளில் சந்தோஷப்படுவேன்


Kasimani Baskaran
ஜூலை 25, 2025 04:05

ஒரு காலத்தில் அடிமை சாசனம் எழுதிக்கொடுத்த நாட்டுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்பது ஒருவகையான ஆறுதல்.. சரித்திரம் திரும்புகிறது என்பதை பறை சாற்றும் ஒரு சிறப்பான நிகழ்ச்சி. மோடியை பிரதமராக பெற்றது இந்தியாவின் பாக்கியம்.. இது பல உள்ளூர் பீடைகளுக்கு புரியாதது துரதிஸ்டவசமானது.


shaha.Bi
ஜூலை 25, 2025 01:10

ஏன் வழக்கம் போல் கட்டி தழுவலையா ?


நிக்கோல்தாம்சன்
ஜூலை 25, 2025 04:29

உங்களின் வெறுப்பு வழக்கப்படி ஒரு குண்டு வைக்கலாம் , இல்லையா பாகிஸ்தான் முஸ்லிம்கள் வழக்கப்படி பிச்சை எடுத்திருக்கலாம் இது எதனையும் பண்ணாமல் இருப்பது தான் உங்களுக்கு வெறுப்பு இல்லையா ?


Natarajan Ramanathan
ஜூலை 25, 2025 05:41

கருமம்... கருமம்... அந்த ஆளை எல்லாம் கட்டி தழுவலாமா? கேவலம்.


vadivelu
ஜூலை 25, 2025 09:53

வேலையை பாருங்கப்பா


M Ramachandran
ஜூலை 24, 2025 23:32

பாரதத்தில் மோடி ஆட்சி காலம் சரித்திரத்தில் முக்கிய இடம் பெற்று விடும். நான் கூட BJP எப்படி இருக்க போலாகிறதோர் என்று எண்ணியிருந்தேன். இந்தியாவை தலை நிமிர்த்து பார்க்கும் படி செய்தி விட்டார். இத்தே போல் தமிழகத்தில் பிஜேபி ஆட்சி அமைந்தால் தமிழகம் தலை நிமிர்த்து நிற்கும். பதவி ஆசையை விட்டு மக்கள் நலனுக்கு பழனிச்சாமி அவர்களும் ஒத்துழைப்பை கொடுத்தால் மக்களை சுரண்டி பிழைக்கும் கும்பல் காணாமல் போகவேண்டும். நம் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்கள் விவசாயம் நெசவு தொழிலாளிகளுக்கு நல்ல தீர்வு நிச்சயம் கிடைக்கும். வேலை யில்லா நினலமை மாறி நல்ல முன்னேற்றம் அடையும். ஒரு முறை அவர்களிடம் ஆட்சியை கொடுத்து தான் பார்ப்போமே. ஓட்டுக்காக கேவலமான வேலை செய்யும் பூச்சாண்டி காட்டி மத ஒற்றுமையை சீர்குலைக்கும் சரித்திரகால கோவில் களின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் தீவிர வாதிக ஆதரிக்கும் சுய நல குடும்ப வாரிசு அரசிலுக்கு முடிவுரை எழுது வோம். வாழ்க பாரதம். வாழ்க தமிழகம். வளர்க்க தமிழ் மக்கள்.


சமீபத்திய செய்தி