உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / யு.ஏ.இ., அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

யு.ஏ.இ., அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் முகமது பின் ஜாயேத் அல் நயானை சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.,13) சென்றார். அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயணன் கோவிலை நாளை அவர் திறந்து வைக்கிறார். இன்று மாலை சையீத் விளையாட்டு மைதானத்தில், ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். 'அஹலான் மோடி' அதாவது 'வணக்கம் மோடி' என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்க, எமிரேட்சின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 60,000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர்.முன்னதாக, யு.ஏ.இ அதிபர் முகமது பின் ஜாயேத் அல் நயானை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்நிகழ்வின்போது இரு நாட்டுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சந்திப்பின்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் உடன் இருந்தார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், ''அன்புடன் வரவேற்றதற்கு நன்றி. உங்களைச் சந்திக்க வரும்போதெல்லாம், எனது குடும்பத்தினரை சந்திக்க வந்ததாக உணர்கிறேன். கடந்த 7 மாதங்களில் நாங்கள் 5 முறை சந்தித்துள்ளோம். இது மிகவும் அரிதானது மற்றும் இரு நாட்டுக்கு இடையிலான நெருங்கிய உறவை பிரதிபலிக்கிறது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Pats, Kongunadu, Bharat, Hindustan
பிப் 13, 2024 21:14

நான் முன்னர் எழுப்பிய இன்றைய புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றால் என்ன என்ற கேள்விக்கு விடை கண்டுபிடித்து விட்டேன். ஒரு வெளிநாட்டு பத்திரிகையில் வெளியான செய்தி: India, UAE sign pact on trans-continental trade corridor. அதாவது இன்று இந்தியாவிலிருந்து யூஏஇ விழியாக சவுதி, இஸ்ரேல், கிரீஸ் நாடுகளுக்கு இடையே இந்திய சரக்கு போக்குவரத்து ஒப்பந்தம் கையெழுத்தானது. மிகமிக நல்ல செய்தி.


செந்தமிழ் கார்த்திக்
பிப் 13, 2024 19:11

அத ஒரு கொத்தடிமை சொல்வது தான் செம்ம காமெடி.


Anand
பிப் 14, 2024 10:59

உன்னைப்போன்ற கேடுகெட்ட ஜென்மங்கள் இப்படியே பேசிக்கிட்டு வேண்டியதுதான்......


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 13, 2024 18:59

என்ன எழவு ஒப்பந்தமோ ........... குப்பனும் சுப்பனும் அப்படியேதான் இருக்கான் ..........


Anand
பிப் 14, 2024 11:00

குப்பனும் சுப்பனும் முதலில் டாஸ்மாக்கை விட்டு வெளியில் வரணும், அங்கேயே குப்புற படுத்துக்கொண்டிருந்தால் அப்படியே தான் கிடைக்கணும்....


திருநெல்வேலிகாரன்
பிப் 15, 2024 12:15

குப்பனும் சுப்பனும் நாட்டில் எல்லா மாநிலத்திலும் இருக்கான்? குப்பனும் சுப்பனும் பொருளாதாரத்தில் முன்னேற வில்லை என்று சொன்னால், அவங்கள குடிகாரர்களாக காட்சிப்படுத்தும் உங்களை போன்றோர்களை அரசியல் இருந்து அப்புறப்படுத்தனும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
பிப் 13, 2024 18:21

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றால் என்ன? எந்த நாட்டிற்கு சென்றாலும், எத்தனை முறை சென்றாலும், எந்த கட்சி ஆட்சியின் பிரதமர் சென்றாலும் இந்த ஒற்றை வரி செய்தி தவறாமல் வருகிறது. மக்களுக்கு என்னவென்றே தெரியாத, யாரும் சொல்லாத, யாருக்கும் விளங்காத, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றால் என்னவென்று தெரிந்தவர்கள் யாராவது விளக்குங்களேன்.


செந்தமிழ் கார்த்திக்
பிப் 13, 2024 18:07

பசியால் வாடிய மக்களுக்கு உணவு கொடுத்த ஏழை விவசாய மக்கள் டெல்லியில் அடிப்படை வாழ்வியலுக்காக உயிரை கொடுத்து போராடி வருகிறார்கள்.,


Sathyasekaren Sathyanarayanana
பிப் 13, 2024 18:51

போராடுகிறவர் விவசாயியா இல்லையா என்று எங்களுக்கு தெரியும் கொத்தடிமை உனக்கு தான் தெரியாதா? அனுப்பியவன் நீ தானே?


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ